நெல்சன் திலீப்குமாருக்கு போட்டியாக “பிளாக் யூமர்” படங்களை எடுக்க ஆசைப்படும் லோகேஷ் கனகராஜ்.? பேட்டியில் அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்.

nelson-and-lokesh
nelson-and-lokesh

சினிமா உலகில் அசுர வளர்ச்சியை எட்டும் இயக்குனர்கள் ஆக்சன் படம் எடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள் ஒரு சிலர் காதல் சம்பந்தப்பட்ட எதையாவது ஒரு படத்தை எடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் ஆக்ஷன் படங்களை எடுத்து கொடுப்பதில் லோகேஷ் கனகராஜ் கை தேர்ந்தவராக இருக்கிறார்.

மாநகரம் படத்தை தொடர்ந்து இவர் கார்த்தியை வைத்து கைதி என்ற ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் ஆக்சன் படத்தை கொடுத்திருந்தார். இரண்டு ஹிட் படத்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் முதல் முறையாக கைகோர்த்து மாஸ்டர் திரைப்படத்தை கொடுத்திருந்தார் இந்த படமும் ஆக்சன் படமாகவே அமைந்தது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கு ஆக்சன் திரைப்படங்களையும் தாண்டி மற்ற படங்களையும் எடுக்கும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக பிளாக் யூமர் உள்ள படங்களை எடுப்பது எனக்கு மிகப்பெரிய ஒரு ஆசை என கூறினார். ஆனால் அதை சமீப காலமாக நெல்சன் திலீப்குமார் கொடுத்து அசத்தி வருகிறார்.

நெல்சன் திலிப்குமார் இதுவரை அவர் எடுத்த பிளாக் யூமர் உள்ள படங்கள் அனைத்தும் மக்களை கொண்ட வைத்துள்ளது. இதனால் டாப் நடிகர்  கண்களில் பட தொடங்கி உள்ளார். முதலாவதாக விஜயை வைத்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார். இதுவும் அப்படிப்பட்ட ஒரு படமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்து “விக்ரம்” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வேண்டுமானால் அவர் வெகு விரைவிலேயே பிளாக் யூமர் உள்ள ஒரு படத்தை எடுத்தாலும் நடக்கலாம் என தெரியவந்துள்ளது.