சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் கேஜிஎப் இந்த திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் யாஷ். இந்தத் திரைப்படத்திற்கு முன்பே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
மேலும் கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தினை தொடர்ந்து இந்த வருடம் சில மாதங்களுக்கு முன்பே கே ஜி எஃப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி உலக அளவில் ரூபாய் 1200 கோடிக்கும் முன் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது இவ்வாறு உலகளவில் பிரம்மாண்ட சாதனை கேஜிஎப் 2 படைத்துள்ள நிலையில் இவருடைய படங்களுக்கு இந்திய அளவிலும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பெங்களூரில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் ஒன்று திரைப்படத்தினை தயாரிக்கும் பணியில் இறங்கி இருக்கிறது அவர்கள் தயாரிக்கும் முதல் படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் யாஷ் கூட்டணி சேர உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இவ்வாறு இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் நடிகர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தினை இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இன்னும் சில வாரங்களில் முடிய இருப்பதாகவும் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்ற வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் இணைய உள்ளார் மேலும் இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படம் ஆக்சன் படமாக இருக்கும் என்றும் ஆறு முன்னணி நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.