5 கோடியால் தலைவர் படத்திற்கு வந்த சோதனை.! மண்டையை போட்டு பிச்சி கொள்ளும் லோகேஷ் கனகராஜ்..

rajini
rajini

நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இதனை அடுத்து ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்திலும் நடித்து முடித்து இருக்கும் நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

இவ்வாறு இது ஒரு புறம் இருக்க இந்த படங்களை தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விரைவில் நடிப்பார் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் பல முன்னணி நடிகர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படங்களில் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறார்கள்.

அப்படி தற்பொழுது லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தினை உருவாக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியை இருக்கிறது. எனவே லியோ படத்திற்குப் பிறகு எந்த படத்தை லோகேஷ் இயக்க இருக்கிறார் என்பது சரியாக தெரியவில்லை ஏனென்றால் சமீபத்தில் தெலுங்கு திரைவுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் ஒருவர் லோகேஷை சந்தித்து படம் பண்ணுவதற்காக கேட்டிருக்கிறாராம்.

எனது இதற்காக 5 கோடி அட்வான்ஸ் தொகையையும் கொடுத்திருக்கும் நிலையில் இதற்காக லோகேஷ் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி லியோ திரைப்படத்தையும் முடிக்க போகும் நிலையில் அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர் தொடர்ந்து எப்போது படம் பண்ணலாம் என கேட்டு வருகிறார்.

எனவே சூப்பர் ஸ்டார் படத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த லோகேஷ்க்கு தற்பொழுது சிக்கலாக அமைந்திருக்கிறது. இவ்வாறு ஐந்து கோடி முன் பணம் வாங்கி இருப்பதனால் அதற்காகவும் யோசித்து வர மறுபுறம் ரஜினியிடம் இதனை சொல்ல தயங்குகிறாராம். இவ்வாறு சினிமாவில் 50 கோடி சம்பளம் வாங்கும் இருந்து வரும் இவருக்கு ஐந்து கோடி பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.