லோகேஷ் கனகராஜும், கமலும் இணையும் படத்தில் அடுத்தடுத்த டாப் நடிகர்களை கமிட் செய்ய புதிய திட்டம். இந்த தடவ யார் தெரியுமா..

தமிழ் திரை உலகில் குறைந்த படங்களை இயக்கியிருந்தாலும் அத்தகைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் இயக்குனருக்கு நல்ல பெயரை எடுத்து கொடுத்ததால் தமிழ் சினிமாவையும் தாண்டி பிறமொழி பக்கங்களும் கவரப்படும் இயக்குனராக தற்போது மாறி உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கத்தில் மாபெரும் பிளாக்பஸ்டர் படங்களாக மாதிரியது. கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படம் தான் இந்த திரைப்படங்களை தொடர்ந்து தற்போது அவர் உலக நாயகன் கமலஹாசனை வைத்து “விக்ரம்” என்ற படத்தை எடுக்க உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு சினிமா உலகில் மிகவும் பிடித்த போன நடிகர் என்றால் அது கமல் தான் அவருக்காக சிறப்பான கதை ஒன்றை எழுதி வைத்துள்ளார். மேலும் கமலுக்கு போட்டியாக சிறந்த நடிக்கும் நடிகர்களை தேர்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் மலையாள சினிமாவில் நடிப்பில் பெயர்போன பகத் பாசிலை களத்தில் இறக்கி விட்டுள்ளார் மேலும் விஜய் சேதுபதியும் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார் ஆனால் எந்த ரோல் என்பது இதுவரை தெரியாமல் இருக்கிறது.

முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இருக்கிறதாம் ஆனால் எல்லாம் சரியாக அமைந்து விட்டால் டாப் நடிகர்களான பகத் பாசில் மற்றும் கமலுடன் நடிப்பது எனக்கு பெருமை என தெரிவித்துள்ளார்.

இப்படி மூவரும் இணைந்தால் இந்த திரைப்படம் மெகா ஹிட் படமாக இருக்கும் என பலரும் தற்போதைய கனவு காண ஆரம்பித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கான அறிவிப்பும் மிக விரைவில் வரும் என கூறப்படுகிறது.