நேற்று முன்தினம் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக அனிருத் இசையமைத்து கொண்டுவருகிறார். இந்த படத்தின் டைட்டில் விக்ரம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விக்ரம் படத்தை பற்றி ஒரு தகவல்கள் இணையதளத்தில் பரவி கொண்டே வருகிறது. அது என்னவென்றால் டீசர் ஒரு வெப் சீரியலின் காப்பி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என இணையதளத்தில் பரவிக் கொண்டே வருகிறது.
கமல் படத்தின் டைட்டில் டீஸர் நெட்பிளிக்ஸ் தளத்திலுள்ள நார்கோ மெக்ஸிகோ சீசன் 2 என்ற வெப் தொடரை கொஞ்சம் மாற்றி இந்த டீசரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
நார்கோ மெக்ஸிகோ சீசன் 2வில் உள்ள அரங்க அமைப்பு, லைட்டிங் ஒர்க், டேபிள் அடியில் துப்பாக்கிகள், டைனிங் டேபிள் அப்படியே இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது என்று இணையதளத்தில் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது.
இந்த செய்தியை கமலின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.