தளபதி 67 படத்தில் நடிக்க அழைத்த லோகேஷ்.. உங்க சவகாசமே வேண்டாம் என மறுத்த விஷால் – வெளிவரும் உண்மை தகவல்..

thalapathy-67
thalapathy-67

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறார் அந்த வகையில் கடைசியாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து எடுத்த விக்ரம். இந்த படம் வசூல் ரீதியாக 410 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது..

அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து தளபதி 67 திரைப்படத்தில் எடுப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார் அண்மையில் கூட படத்தின் பூஜை போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த படத்திற்கான சூட்டிங் விரைவில் தொடங்கப்பட இருக்கிறதாம்..

தளபதி 67 படத்தில் விஜயுடன் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இதுவரை தெரியப்படாமலேயே இருக்கிறது. ஆனால் ஒரு சில நடிகர், நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன அந்த வகையில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

அது முற்றிலும் பொய் என்று.. நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் கூறினார். அவர் சொன்னது என்னவென்றால்.. லோகேஷ் கனகராஜ் மார்க ஆண்டனி படம் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று விஷாலை சந்தித்து தளபதி 67 படம் குறித்து பேசி இருக்கிறார் ஆனால் விஷால் அதனை திட்ட வட்டமாக மறுத்துள்ளார்..

நடிகர் விஷால் லத்தி திரைப்படம் வருகின்ற டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறதாம் அதனைத் தொடர்ந்து மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 சூட்டிங் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் உடன் ஒரு படம் என அடுத்தடுத்து பிஸியாக இருப்பதால்தான் தளபதி 67 – க்கு தேதியை விஷாலால் ஒதுக்க முடியவில்லை இதனை லோகேஷிடம் விஷால் தெள்ளத் தெளிவாக எடுத்து சொல்லி விட்டாராம்.. இருப்பினும் எதிர்காலத்தில் விஜயை சந்தித்து அவருக்கு ஒரு கதையை சொல்லி அவரை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன் என விஷால் கூறி இருக்கிறார்.