தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகந்து வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாரிசு படத்தின் வெளியிடு குறித்து பல பிரச்சனைகள் எழுந்து வந்தாலும் பொங்கலில் ரிலீசாகுவதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.
வாரிசு திரைப்படம் முடிந்த கையோடு அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இணைய உள்ளதும் அனைவருக்கும் தெரிந்தது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. மேலும் இந்த படம் விக்ரம் படத்தின் தொடர் கதை என்பதால் தளபதி 67 திரைப்படத்தில் கார்த்தி, சூர்யா, விஜய், கமல், என முன்னணி நடிகர்கள் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் மூலம் நீண்ட ஆண்டுகள் கழித்து திரிஷாவும், விஜயும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் லோகேஷ் யுனிவர்ஸ் சினிமாடிக்கில் இணைய உள்ளது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதனை அடுத்து தளபதி 67 திரைப்படம் பிரபல ஆங்கிலத் திரைப்படத்தின் ரீமேக் என தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 2005 ஆம் ஆண்டு வெளியான என் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்ற ஆக்சன் திரில்லர் திரைப்படத்தின் ரீமேக் தான் தளபதி 67 என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது இந்த படத்தின் உரிமையையும் லோகேஷ் கனகராஜ் கைப்பற்றி உள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் நடிகர் விஜய்க்கு ஏற்றார் போலவும் இந்த கால கட்டத்திற்கு ஏற்றார் போலவும் லோகேஷ் கனகராஜ் கதைகளை மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடங்க உள்ள தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.