Leo : லோகேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான மாஸ்டர், விக்ரம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர். இதனால் போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்து இருந்த நிலையில் பல தடைகளை தாண்டி லியோ இன்று கோலாகலமாக உலகம் முழுவதும் வெளியானது.
படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் எமோஷனல் கலந்த கதையாக இருந்ததால் நல்ல விமர்சனமே இதுவரையும் கிடைத்துள்ளது படம் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாவது பாதி பொறுமையாகவும் செல்லும்படி இருப்பதாக கூறப்படுகின்றன முதல் பாதியில் தனது குடும்பத்துடன் வாழ்க்கையை அழகாக வாழ்ந்து வருவார்.
லோகி முதல் கார்த்திக் சுப்புராஜ் வரை லியோ FDFS பார்த்த சினிமா பிரபலங்கள்
ஒரு கட்டத்தில் ஹயானாவிடம் பள்ளி குழந்தைகளை காப்பாற்றுவது என அனைத்தும் ரசிக்கும்படி இருந்ததால் முதல் பாதியை கொண்டாடினார் இரண்டாவது பாதியே எமோஷனல் மற்றும் ஆக்சன் இருந்ததால் கொஞ்சம் ரசிகர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம் இந்த படத்தில் பலரும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்தாலும்..
ஒரே ஒரு கதாபாத்திரம் மற்றும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் – த்ரிஷா லியோவில் ஜோடியாக நடிக்கின்றனர். இதற்கு முன்பு விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த படங்களில் பெரும்பாலும் ரொமான்ஸ், காமெடி சீன்கள் அதிகம் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
சிங்கம் மாதிரி எதிர்பார்த்தோம்.. ஆனா பூனையா மாறிடுச்சு – லியோ படத்தை விளாசிய சினிமா விமர்சகர்.!
அதையே இந்த படத்திலும் எதிர்பார்த்தனர் ஆனால் லியோ படம் அதிரடி ஆக்சன் படம் என்பதால் த்ரிஷாவுக்கும் விஜய்க்கும் இடையே ரொமான்ஸ், காமெடி கலந்த பேச்சுக்கள் எதுவுமே இல்லை. சின்ன காட்சியில் வந்து போகிறார். மொத்தத்தில் நடிகை த்ரிஷா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு ஏமாற்றமே என கூறப்படுகிறது.