தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருவோர்தான் நடிகர் விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
இதனை தொடர்ந்து எப்படியாவது விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் அது மட்டும் இல்லாமல் நாம் தமிழ் மொழியை காட்டிலும் மற்ற மொழிகளிலும் பிரபலமாக வேண்டும் என்ற காரணத்தினால் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் தளபதி விஜய் அவர்கள் கைகோர்த்துள்ளார்.
அந்த வகையில் இவர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு வாரிசு என பெயர் சூட்டப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது அது மட்டும் இல்லாமல் இவர் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் நடிபதன் காரணமாக தளபதி 66 விட 67 ல் தான் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் லோகேஷ் இயக்க போகும் அந்த திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் கௌதம் மேனன் சுமார் ஆறு வில்லன்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது அது மட்டும் இல்லாமல் த்ரிஷா சமந்தா கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட மூன்று கதாநாயகிகளும் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார்களாம்.
இவ்வாறு திரைப்பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் தற்பொழுது ஒரு செய்தி வெளியாகியுள்ளது அதாவது ஆன் ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை லோகேஷ் கனகராஜ் வாங்கி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது ஆகையால் தளபதி 67 திரைப்படம் ஆனது இந்த திரைப்படத்தின் ரீமேக்காக இருக்க அதிக அளவு வாய்ப்புள்ளது என கூறி வருகிறார்கள்.
லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் என லோகேஷ் கனகராஜ் அனைவரும் புகழ்ந்து வந்த நிலையில் தளபதி 67 ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகிய நிலையில் அவை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்கும் என பட குழு வினர் தெரிவித்த நிலையில் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்கள்.