இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் தோல்வியை பார்க்காத இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், ஆகிய நான்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் வசூலிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி, மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். பூஜை உடன் தொடங்கிய தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே விஜய்யை வைத்த மாஸ்டர் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அதேபோல தளபதி 67 திரைப்படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படம் விக்ரம் திரைப்படத்தின் தொடர்ச்சி கதை என்று கூறப்படுகிறது இதனால் தளபதி 67 எல்சியுவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் தளபதி 67 திரைப்படத்தை நடிகை பாடல்கள் இல்லாமல் எடுக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். இதற்கு பதில் அளித்த லோகேஷ் விஜய் வைத்து ஹீரோயின் இல்லாமல் பாடல்கள் இல்லாமல் படம் எடுக்கலாம் அது மட்டும் இல்லாமல் அவரிடம் இதைப் பற்றி ஏற்கனவே கூறி இருக்கிறேன் அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார்.
ஆனால் அவர் தற்போது இருக்கும் இடமும் அவரை சுற்றி இருக்கும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைய கூடாது என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக நடிகைகளின் காட்சிகளையும் பாடல் காட்ச்சிகளையும் நீக்க வேண்டும் அதுமட்டும் இல்லாமல் தளபதி 67 ஒரு பெரிய பச்ஜட் திரைப்படம் இதனால் உடனே ஒன்னும் பண்ண முடியாது.
ஆனால் ஒருமுறை நடிகை, பாடல்கள் இல்லாமல் விஜய் வைத்து நான்படம் எடுப்பேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பாடல்கள் இல்லாமல் வெளியான கைதி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதேபோல விஜயை வைத்து பாடல்கள் இல்லாமல் எடுத்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.