நடிகர் சிம்பு பெரும்பாலான திரைப்படங்கள் காதல் மற்றும் ஆக்ஷன் திரைப்படங்கள் தான் இதுவரை வந்துள்ளன இப்படி நடித்து வந்த சிம்பு தற்போதைய வித்தியாசமான கதைகளை கேட்டு நடிக்க ஆர்வம் எடுத்துள்ளார் அந்த வகையில் மாநாடு பத்து தல மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய மூன்று படங்களுமே சிம்புவின் கேரியரில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என பார்க்கப்பட்டது.
அதில் முதலாவதாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெற்றி நடை கண்டு வருகிறது இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதாக தோல்வியடைந்தா என்பது குறித்து தான் நாம் தற்போது பார்க்க இருக்கிறோம்.
நடிகர் சிம்பு நடித்த பெரும்பாலான படங்களில் பஞ்ச் டயலாக்குகளும் காதல் சீன்களில் தான் அதிகம் ஆனால் மாநாடு படத்தில் அது அறவே கிடையாது ஏனென்றால் சைலண்டாக படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பை மட்டுமே வெளிக்காட்டி அசதியுள்ளார். மேலும் பெரிய அளவில் அவர் பஞ்ச் டயலாக் பேசவும் இந்த படத்தில் அவர் விரும்பவில்லையாம்.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் ஒரே காட்சிகள் மறுபடியும் மறுபடியும் காட்டப்பட்டாலும் அதை ஏன் காட்டப்படுகிறது என்பதை தெள்ளத்தெளிவாக எடிட்டரும் சரியாக எடுத்துள்ளார் மேலும் வெங்கட்பிரபு வேறு ஒரு பரிமாணத்தில் இந்த திரைப்படத்தை எடுத்துள்ளாராம்.
அதனால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் யுவன் ஷங்கர் ராஜா தனது மாஸான இசையை இந்த படத்திற்கும் கொடுத்து பின்னிப் பெடல் எடுத்து உள்ளார் மேலும் சிம்புவும், எஸ். ஜே. சூர்யா வரும் காட்சிகள் அனைத்தும் தெறி மாஸ். மேலும் பிரேம்ஜி, கருணாகரன், ஒய்ஜி மகேந்திரன், சரி சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன் என அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து அசத்தியுள்ளார்.
இந்த படத்தில் நடிகர்களைப் பற்றிய பெருமளவு குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்துள்ளனர் இந்த திரைப்படம் பொதுவாக மக்கள் மத்தியில் தற்போது வெற்றியை பெற்று உள்ளது இந்த திரைப்படம் பல நாட்கள் ஓடி சிம்பு கேரியரில் ஒரு மிகப்பெரிய ஒரு சிறந்த படமாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது ஆக மொத்தத்தில் இந்த படம் பாஸ்.