குறுகிய நாட்களிலேயே வசூலில் 1000 கோடி மிரட்டிவிட்ட 5 திரைப்படங்கள்.! இதோ லிஸ்ட்

top 5 movies
top 5 movies

top 5 Movies: கடந்த 2023ஆம் ஆண்டு ஏராளமான நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி பல கோடி வசூல் செய்தது. அப்படி சின்ன பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை பல கோடி லாபம் பார்த்த நிலையில் இந்திய சினிமாவில் சில நாட்களிலேயே 1000 கோடி வசூலை எட்டிய டாப் 5 படங்கள் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

5. பதான்: ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான ஆக்சன் திரில்லர் திரைப்படம் தான் பதான். இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் கீழ் ஆதித்யா சோப்ராவால் தயாரிக்கப்பட்டது. பதான் படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், ராணா உள்ளிட்ட மேலும் பல பிரபலங்கள் இணைந்து நடித்தனர்.

இப்படத்தின் பாடல் வெளியான நிலையில் இதில் தீபிகா படுகோன் மிகவும் கவச்சியாக இருந்ததால் எதிர்ப்பு எழுந்தது இருந்தாலும் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அந்த வகையில் வெளியான 27 நாட்களில் 1000 வசூல் செய்து சாதனை படைத்தது.

4. ஜவான்: விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் போன்ற தமிழ் படங்களை இயக்கி வந்த அட்லி ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமானார். இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் வெளியான 18 நாட்களில் 1000 கோடி பெற்றது.

3. கே ஜி எஃப் 2: இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் கே.ஜி.எஃப் 2. இப்படத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்க சஞ்சய், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி போன்றவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர் இப்படம் ரிலீசான 16 நாட்களில் 1000 கோடி வசூலை பெற்றுள்ளது.

2. RRR: எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் முக்கிய கேரக்டரில் நடித்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து அதிரடியான ஆக்ஷன் திரில்லர் படமாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உருவானது .இப்படத்தினை தனய்யா தயாரிக்க இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் படம் 16 நாட்களில் 1000 கோடி வசூல் செய்தது.

1. பாகுபலி 2: 2017ஆம் ஆண்டில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், ராணா டகுபதி, அனுஷ்கா, சத்யராஜ் ஆகியோர்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இப்படம் 10வது நாளிலேயே 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.