2022-ல் Book My Show-வில் முன்பதிவில் டாப் 5 இடங்களைப் பிடித்த திரைப்படங்களின் பட்டியல்.!

ponniyin-selvan
ponniyin-selvan

ஆன்லைன் புக்கிங் வெப்சைட்டில் 2022 ஆம் ஆண்டு புக் மை ஷோ என்ற வெப்சைட்டில் அதிக டாப்ரேட்டிங் பெற்ற திரைப்படங்களின் லிஸ்ட்டை தற்போது காணலாம்.

தமிழில் வெளியாகிய அடங்காமை, எஃப் ஐ ஆர், வலிமை, ஹே சுனாமிக்கா, மாறன், மன்மத லீலை, ஹாஸ்டல், விக்ரம், o2 , பட்டாம்பூச்சி, டி ப்ளாக் யானை, விருமன் கோப்ரா பொன்னியின் செல்வன் லவ் டுடே என 200 திரைப்படங்கள் கிட்டத்தட்ட தமிழில் வெளியாகி உள்ளன ஆனால் இதில் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளன என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

குறிப்பாக பொன்னியின் செல்வன் விக்ரம் பீஸ்ட் வலிமை எதற்கும் துணிந்தவன் திருச்சிற்றம்பலம் சர்தார் லவ் டுடே வெந்து தணிந்தது காடு பெருமான் ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் லேட்டர் நடத்தியது கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களின் புக் மை ஷோ என்ற இணையதளத்தில் முன்பதிவில் டாப் 5 இடத்தைப் பிடித்த திரைப்படங்கள் என்ன என்ன என்று இங்கே காணலாம்

முதலிடத்தில் கேஜிஎப் சாப்டர் 2

பிரசாந்த் நீள் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநதி, ஷெட்டி, சஞ்சய், ரவீனா டாண்டன் மாளவிகா, அவினாஷ், பிரகாஷ் ராஜா, ஆகியோர் நடிப்பில் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகிய திரைப்படம் வெறும் 100 கோடி பட்ஜெட்டில் தான் உருவாக்கப்பட்டது இந்த திரைப்படம். ஆனால் உலகம் முழுவதும் 1200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.

இரண்டாவது இடத்தில் ஆர் ஆர் ஆர்

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் ஆல்ய பாட் ஸ்ரேயா சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியாகிய திரைப்படம் தான் ஆர் ஆர் ஆர் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு என்ற பாடல் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்தது இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகி ஒட்டு மொத்தமாக 1150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மூன்றாவது இடத்தில் பீஸ்ட்

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே செல்வராகவன், யோகி பாபு, அபார்நாதாஸ், ரெடிங்க்லி, வி டிவி கணேஷ் என பல நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அதுமட்டுமில்லாமல் தீவிரவாதத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விஜய் ரா ஏஜண்டாக நடித்திருந்தார் வெறும் 150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 250 கோடி வரை வசூல் செய்தது.

நான்காவது இடத்தில் பொன்னியின் செல்வன்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிய திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தில் விக்ரம் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, பிரகாஷ் ராஜ, ரகுமான், சாரா அர்ஜுன், நாசர், நிழகள் ரவி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் கடந்த 30 ஆம் தேதிக்கு திரைக்கு வந்த இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது இந்த திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கிஸ்  மற்றும் லைக்கா நிறுவனம் இரண்டும் இணைந்து தயாரித்திருந்தார்கள்.

ஐந்தாவது இடத்தில் டாக்டர்  ஸ்ட்ரேன்ஜ்

இயக்குனர் ஷாம் ரைமி இயக்கத்தில் எலிசபெத் சிவடையில் எஜோபேர் பெனடிக் வோங் கம்பர் பேட்ச் ஆக நடிப்பில் கடந்த மே மாதம் இரண்டாம் தேதிக்கு திரைக்கு வந்த ஹாலிவுட் திரைப்படம் டாக்டர் ஸ்ட்ரேன்ஞ் 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது திரைப்படம் ஆயிரம் கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.