2023 இரண்டாவது பாதியில் வெளிவர இருக்கும் முக்கிய 10 தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்

rajini
rajini

தமிழ் சினிமா உலகில் ஆண்டுதோறும் நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியை பெறுகின்றன அந்த வகையில் 2023 ஆண்டு நடிகர், நடிகைகளுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் பாதியில் வெளிவந்த படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக  ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களிலும் மிகப்பெரிய படங்கள் வெளிவர இருக்கின்றன. அதிலும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பத்து திரைப்படங்கள் குறித்து நாம் விலாவாரியாக பார்ப்போம்..

1. லியோ :

தளபதி விஜய் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.  லியோ படத்தை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்  படத்தில் விஜய் உடன் இணைந்து  மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கெளதம் மேனன், த்ரிஷா, பிரியா ஆனந்த் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகிறனர். லியோ – அக்டோபர் 19, 2023.

2. ஜெயிலர் :

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருகிறது ரஜினி இதில் வயதான தோற்றத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது அவருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, போன்றவர்கள் நடிக்கின்றனர்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

3. மாவீரன் :  மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவக்கார்த்திகேயன் மற்றும் ஆதிதி ஷங்கர், மிஸ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.  படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

4. அயாலன் :

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங், கருணாகரன் மற்றும் பானுப்பிரியா போன்றவர்கள் நடித்து உள்ளனர் படத்தை ஆர் டி ராஜா தயாரிக்க.. ஏ ஆர் ரகுமான் அமைத்துள்ளார் படம் வருகின்ற தீபாவளி முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.

5. ஜப்பான் :

சர்தார் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி ரஜினி முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடித்து வருகிறார் அவருக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடிக்கிறார். ஜப்பான் படத்திற்கு ஜி.கே பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் ஆண்மையில்  பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து நல்ல வரவேற்ப்பு பெற்றது ஜப்பான் படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

6. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  : ரஜினியை வைத்து வெற்றி கண்ட கார்த்திக் சுப்புராஜ் தற்போது ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யாவை வைத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை எடுத்துள்ளார் இந்த படம் வருகின்ற தீபாவளி முன்னிட்டு வெளியாக இருக்கிறது இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் தன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

7. கேப்டன் மில்லர்  :

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் பிரியங்கா மோகன் மற்றும் பல முன்னணி பிரபலங்கள்  படத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்க.. ஜீவி பிரகாஷ் இசையமைக்கிறார் இந்த படம் டிசம்பர் 2023 ல் வெளியாக உள்ளது.

8. சந்திரமுகி 2 :

சந்திரமுகி முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பி. வாசு சந்திரமுகி இரண்டாவது பாகத்தை எடுத்து வருகிறார் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு, ராதிகா சரத்குமார் போன்ற பிரபலங்களும் நடித்து வருகின்றனர் இந்த படத்தை கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகியுள்ளது.

9. மார்க் ஆண்டனி  : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க திரில்லர்  மற்றும் அதிரடி ஆக்சன் கதையாக உருவாகியுள்ளது படத்தில்  எஸ். ஜே. சூர்யா, விஷால் போன்றவர்கள் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகமன கூறப்படுகிறது.

10. இறைவன் : கனெக்ட் கோல்ட் படங்களை தொடர்ந்து நயன்தாரா நடிப்பு வரும் திரைப்படம் இறைவன் இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இறைவன் ஆகஸ்ட் 2023 வெளியாக உள்ளது.