சின்னத்திரைகள் வாரம் வாரம் எந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்படுகிறது என்பதை டிஆர்பி ரேட்டிங்கின் மூலம் தெரிந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம் அந்த வகையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் இணையதளத்தில் வெளியாகி உள்ளது வழக்கத்தை போல சன் டிவியின் கயல் சீரியல் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
இரண்டாவது இடத்தினை சன் டிவியின் சுந்தரி சீரியல், மூன்றாவது இடத்தினை வானத்தைப்போல சீரியலும் பிடித்திருக்கிறது. இவ்வாறு முதல் மூன்று இடங்களை சன் டிவியின் சீரியல் பிடித்திருக்கிறது இதனை தொடர்ந்து நான்காவது இடத்தினை விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி செய்யுங்கள் மகா சங்கமம் பெற்றிருக்கிறது.
இவ்வாறு இந்த சீரியல்கள் நான்காவது இடத்தினை பிடிப்பதற்கு முக்கிய காரணம் விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வந்தது தான் தற்பொழுது எதிர்பாராத விதமாக கோபி ராதிகா ஹனிமூன் கொடைக்கானல் செல்லும் அதே இடத்திற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களும், பாக்கியலட்சுமி குடும்பத்தினர்களும் வர அங்கு அனைவரிடமும் மாட்டிக் கொண்ட கோபி என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடுகிறான்.
ராதிகா கோபியை கழுவி ஊற்றி வருகிறார் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்பட்டு இருக்கிறது. மேலும் இதனைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்தை கண்ணான கண்ணே, ஆறாவது இடத்தினை காதல் கதையை கொண்டு ஒளிபரப்பாகி வரும் ரோஜா, மேலும் ஏழாவது இடத்தினை தன்னுடைய மனைவிகளை அடிமைப்படுத்தி வரும் கணவன்களை வைத்து ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என அடுத்த மூன்று இடங்களையும் சன் டிவியை பிடித்துள்ளது.
அதன் பிறகு எட்டாவது இடத்தில் கிளைமாக்ஸ் நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, ஒன்பதாவது இடத்தினை போலீஸ் கெட்டபில் கலக்கி வரும் சந்தியாவின் ராஜா ராணி 2 சீரியல் கிடைத்துள்ளது. பிறகு பத்தாவது இடத்தினை சன் டிவியின் அன்பே வா சீரியல் பெற்றிருக்கிறது இவ்வாறு அதிக அளவில் சன்டிவியின் சீரியல்கள் டிஆர்பியில் இந்த வாரமும் இடம் பெற்று இருக்கிறது.