Tamil serial; பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய், சன் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அப்படி எந்தெந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது வாரம் தோறும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட் வெளியாகி வருகிறது எனவே இதனை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் 10வது இடத்தினை சன் டிவியின் அன்பே வா சீரியல் பிடித்திருக்கிறது. இதனை அடுத்து டாப் 5 இடங்களில் இருந்து வந்த விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 9வது இடத்தினை பிடித்திருப்பது அதிர்ச்சினை ஏற்படுத்தி உள்ளது. 8வது இடத்தினை விஜய் டிவியின் புதிய சீரியலான சிறகடிக்க ஆசை சீரியலும், 7வது இடத்தினை சன் டிவியின் சுந்தரி சீரியல் பிடித்துள்ளது.
மேலும் 6வது இடத்தில் புத்தம் புது சீரியலான மிஸ்டர் மனைவி என்ற சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு மேல் முதல் ஐந்து இடங்களை பெற்றிருக்கும் டாப் சீரியல்களை பார்க்கலாம். 5வது இடத்தை விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பிடித்திருக்கும் நிலையில் சமீப காலங்களாக விறுவிறுப்பாக பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி தற்பொழுது பாக்கியா சமைக்கும் பொழுது செல்வியின் அசால்டால் திருமணத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் இனியா பிளஸ் டூவில் அதிக மார்க் எடுத்திருப்பது குடும்பத்தினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 3வது இடத்தினை அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தினை வைத்து ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலுக்கு கிடைத்துள்ளது.
2வது இடத்தினை குணசேகரனின் ஆணவத்திற்கு ஆப்பு வைத்திருக்கும் நான்கு மருமகள்களும் தங்களது சுயமரியாதைக்காக போராடி வரும் எதிர்நீச்சல் சீரியல் பிடித்துள்ளது. முதல் இடத்தினை கயல் சீரியல் பிடித்திருக்கும் நிலையில் டிஆர்பியில் செம ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.