டிஆர்பி-யில் கொடிக்கட்டி பறக்கும் சன் டிவி சீரியல்கள்.! கயலை ஓரம் கட்டிய எதிர்நீச்சல்.. டாப் 5 லிஸ்ட் இதோ

sun tv
sun tv

Top 5 Tamil serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்களின் ஆதரவுடன் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. முன்பெல்லாம் விஜய் டிவியில் ஒரு சில சீரியல்கள் டாப் 5 இடங்களில் ஒரு இடத்தையாவது பிடிப்பது உண்டு. ஆனால் சமீப காலங்களாக விஜய் டிவியின் சீரியல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு சன் டிவியின் சீரியல்கள் தான் டிஆர்பி-யில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

அப்படி இல்லதரசிகள் முதல் இளம் ரசிகர்கள் வரை அனைவரும் நாள்தோறும் சன் டிவியின் சீரியல்களை விடாமல் பார்த்து வருகின்றனர். இந்த வருடத்தின் 34ஆவது வாரத்தில் டாப் 5 ரேட்டிங்கை கைப்பற்றிய சன் டிவி சீரியல்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

எதிர்நீச்சல்: சில வாரங்களாக தொடர்ந்து கயல் சீரியல்தான் முதலிடத்தை பிடித்து வந்தது ஆனால் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியல் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது. ஹோமாவிலிருந்து கண் முழித்து வாக்குமூலம் கொடுத்திருக்கும் அப்பத்தா, அதேபோல் ஜீவானந்தத்தின் மனைவி மரணம், ஈஸ்வரி-ஜீவானந்தம் சந்திப்பு போன்ற எபிசோடுகள் விறுவிறுப்பாக இருந்து வருகிறது. எனவே இந்த வாரம் 11.45 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

கயல்: பின்னுக்கு தள்ளப்பட்ட கயல் சீரியல் இரண்டாவது இடத்தினை பிடித்திருக்கும் நிலையில் எழிலின் திருமணத்திற்கு பிறகு ஆனந்தி செய்த கொலையை மறைப்பதற்காக கயல் முயற்சி செய்து வருகிறார். இது கதைக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பதனால் பின்னுக்கு தள்ளப்பட்ட கயல் சீரியல் 11.39 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

சுந்தரி: சுந்தரி ஐஏஎஸ் அதிகாரியாக பதவி ஏற்றி இருக்கும் நிலையில் புதிய கதைக் களத்துடன் தொடங்கியுள்ளது. இதில் நடிகர் கிருஷ்ணா ஹீரோவாக நடிக்க ஆரம்பத்திலேயே சுந்தரி, கிருஷ்ணா மோதலில் சந்திக்கின்றனர். இவ்வாறு எப்படி இவர்களுடைய வாழ்க்கையில் ஒன்றிணைப் போகிறார்கள் என்பதை வைத்து ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் சுந்தரி தொடர் 9.97 புள்ளி உடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

வானத்தைப் போல: ராஜபாண்டி துளசி இருவரும் மீண்டும் வாழ்க்கையில் ஒன்று சேருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 9.83 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

இனியா: மாமியார் உதவியுடன் மாமனார் மற்றும் அக்காவால் தனக்கு வரும் பிரச்சனைகளை சந்தித்து வரும் இனியா விரைவில் தனது அக்கா அனைத்தையும் புரிந்து கொண்டு மாறுவார் என்ற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் 9.42 புள்ளிகளுடன் 5வது இடத்தை கைப்பற்றியுள்ளது இனியா சீரியல்.