This week OTT Release Movie: வாரம் தோறும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் அதேபோல் ஓடிடியிலும் தவறாமல் வெளியாகிறது. அப்படி இந்த வாரம் எத்தனை படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாகிறது என்பது குறித்து பார்க்கலாம். திரையரங்குகளில் எந்த அளவிற்கு படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் ஓடிடியில் வெளியாகும் படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டை நோ சர்ஸ்: தமிழில் வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகி இருக்கும் படம் தான் டை நோ சர்ஸ். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற இந்த படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.
சஸ்பெண்ட் எக்ஸ்: கரீனா கபூர், விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருக்கும் திரில்லர் படமான சஸ்பென்ஸ் எக்ஸ் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
தி பிளாக் புக்: காணாமல் போன தனது மகனை கண்டுபிடிக்கும் ஒரு தந்தையின் போராட்டத்தினை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்த படத்தில் ரிச்சர்ட், சாம் டிடி உள்ளிட்ட ஏராளமான கோலிவுட் நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர் ஆங்கில படமான தி பிளாக் புக் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
செக்ஸ் எஜுக்கேஷன்: இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஆங்கில தொடர்களில் ஒன்றுதான் செக்ஸ் எஜுக்கேஷன். இந்த தொடரில் பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் பருவத்தினர்களுக்கு இடையே நிகழும் பாலியல் குறித்த சந்தேகங்கள் அவர்களின் பாலியல் வாழ்க்கை போன்றவற்றை கதையாக வைத்து உருவாகியுள்ளது. மேலும் காமெடி, காதல், நகைச்சுவை உள்ளிட்ட பல அம்சங்களுடன் உருவாகி இருக்கும் இந்த தொடரின் நான்காவது சீசன் தற்பொழுது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
அதிதி: பேய்-மருமம் படமாக உருவாகி இருக்கும் அதிதி தெலுங்கு மொழியில் உருவான தொடராகும் இதில் கேசவ் தீபக், காயத்ரி, வெங்கடேஷ் கக்கமனு உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
ஸ்பை கிட்ஸ்: ஆர்மகெடான்: உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்களைக் கொண்டுள்ள ஹாலிவுட் சீரிஸ் படமான ஸ்பை கிட்ஸ் 90ஸ் குழந்தைகள் குறித்து உருவாகியுள்ளது. எப்பொழுதோ உருவாக்கப்பட்ட இந்த படம் பல ஆண்டுகள் கழித்து தொடராக நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த வார இறுதியில் வெளியாகிறது.