இந்த வாரம் மட்டும் வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ.!

Tamil movies: தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் மட்டும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம். சமீபத்தில் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ், ஹரிஷ் கல்யாண் நடித்த எல்ஜிஎம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.

அப்படி சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்துள்ளது. நல்ல விமர்சனத்தையும் வசூலையும் குவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வாரத்தில் வெளியாகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.

வெப்: நட்டி நடராஜன், ஷில்பா மஞ்சுநாத் இணைந்து நடித்திருக்கும் வெப் படத்தின் அறிமுக இயக்குனர் ஹாரூண் என்பவர் இயக்கியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து மொட்டை ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுப்பிரியா, ஷில்பா மஞ்சுநாத், முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வெப் படத்தினை வேலன் ப்ரொடக்ஷன் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரிக்க கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். வெப் படம் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

சான்றிதழ்: கிராம பின்னணியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் சான்றிதழ் படத்தினை மதுரை சம்பவம் திரைப்படத்தினை இயக்கி, நடித்த ஹரிக்குமார் நடித்துள்ளார். கருவறை கிராமம் ஒரு சிறந்த கிராமமாக இருந்து வரும் நிலையில் இதனை கவனித்த அரசு அந்த கிராமத்திற்கு விருது அளிக்கிறது. ஆனால் அந்த கிராமம் விருதை வாங்க மறுக்கிறது. இவ்வாறு கிராம மக்களுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் சான்றிதழ் படம் வருகின்ற ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

விக்ரம் ரத்தோட்(தெலுங்கு): பிச்சைக்காரன் 2 படம் தெலுங்கில் பிச்சகடு 2 என்ற பெயரில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் இதன் மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படமும் தெலுங்கில் விக்ரம் ரத்தோட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளது.

நிலா (மலையாளம்): இந்து லட்சுமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலா படத்தில் கிருஷ்ணா, வினித் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க படுக்கையில் இருக்கும் தாய் மற்றும் அவரது மகனை சுற்றி எடுக்கும் ஒரு மர்ம படமாக உருவாகியுள்ளது. இந்த படமும் வருகின்ற ஆகஸ்ட் 4ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Leave a Comment