2023 – ல் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படங்கள்.. தயாரிப்பாளரின் பேச்சால் வசமாக மாட்டிக் கொண்ட விஜய் படம்

Fahadh Fasil
Fahadh Fasil

இந்த ஆண்டு பல படங்கள் வெளிவந்து வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருந்தாலும் அதே அளவிற்கு சில படங்கள் நெட்டிசன்கள் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட 4 படங்களை பற்றி இங்கு விலாவாரியாக  பார்ப்போம்..

வாரிசு  : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வரும் தளபதி விஜய் நிற்க்க கூட நேரம் இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் அப்படி இந்த ஆண்டு உங்களுக்கு வெளியான விஜயின் வாரிசு படத்தை வம்சி இயக்கியிருந்தார் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா என பலர் நடித்திருந்தனர் படம் குடும்ப கதையை மையமாக வைத்து இருந்தது.

கேப்டன் விஜயகாந்த் நடித்து தோல்வியான படங்கள்.. லிஸ்ட் பெருசா போகுது.?

படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது இந்த படம் அதிக அளவு ட்ரோல் செய்ய காரணம் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தில் டான்ஸ் வேணும்மா டான்ஸ் இருக்கு.. ஃபைட் வேணும்மா ஃபைட்  இருக்கு என ரைமிங்காக பேசி இருந்தார் படம் பார்த்த பிறகு நெட்டிசன்கள் பலரும் பயங்கரமாக கலாய்த்தனர்.

மாமன்னன் : மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதுக்கு முக்கிய காரணம் வடிவேலு, பகத் பாஸில் கதாபாத்திரம் தான் பகத் பாஸில் இந்த படத்தில் வில்லனாக இருந்திருந்தாலும் நெட்டிசன்கள் சோசியல் மீடியா பக்கத்தில் பகத் பாஸிலை ஹீரோவாகினர் அது பெரிய அளவில் பேசப்பட்டது.

நாமினேஷனில் சிக்கிய முக்கிய போட்டியாளர்கள்.. தமிழ்நாட்டில் இருக்கவே தகுதி இல்லை என கொந்தளித்த கூல் சுரேஷ் – பிக்பாஸ் ப்ரோமோ

சந்திரமுகி 2  : பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 வெளியானது படம் ஓரளவுக்கு இருந்தாலும் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சி மற்றும் கங்கனா நடிப்பை பலரும் ட்ரோல் செய்தனர்.

லியோ :  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் மற்றும் எமோஷனல் இருந்தாலும் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக 600 கோடிக்கு மேல் அள்ளியது. இந்தப் படத்தில் வரும் ஃப்ளாஷ் பேக் கதை தான். இது உண்மை இல்லை என்று லோகேஷ் கூறியதை கேட்டு ரசிகர்கள் கிண்டலடித்தனர்.