Tamil Actress: கோலிவுட்டில் ஏராளமான திரைப் பிரபலங்கள் காதல் விவகாரத்தில் சிக்கி பேசும் பொருளாக மாறிய காதல் கிசுகிசுப்புகள் குறித்து பார்க்கலாம். சினிமாவை பொறுத்தவரை திருமணம் செய்துக் கொண்டால் அவருடன் தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல பிரபலங்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இரண்டு மூன்று திருமணம் செய்துக் கொண்டவர்களும் இருந்து வருகிறார்கள்.
அப்படி ஜெமினி-கணேசன் சாவித்திரி ஆரம்பித்து தற்போது சமந்தா-நாக சைதன்யா வரை பலரது காதல் திருமண வாழ்க்கை வரை சென்று பிறகு விவாகரத்து பெற்று பிரிந்துள்ள பிரபலங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.
கமலஹாசன்-கௌதமி: உலக நாயகன் கமலஹாசன் காதல் மன்னனாக இருந்து வருகிறார் இவர் பல காதல் திருமண வாழ்க்கையையும் சந்தித்துள்ளார். தற்பொழுது வரையிலும் பல நடிகைகளுடன் காதலில் இருந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. கமலஹாசன் ஒரு கட்டத்தில் கௌதமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இதனை அடுத்து 2016ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
நயன்தாரா-பிரபுதேவா: கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நயன்தாரா தம்பதியினர்களுக்கு உயிர் மற்றும் உலக் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். நயன்தாரா பிரபுதேவா இயக்கத்தில் உருவான வில்லு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த சமயத்தில் இவர்களுக்கிடையே காதல் மலர பிரபுதேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் காதலித்து வந்தார். அவருக்காக நயன்தாரா கையில் டாட் டூ குத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிரபுதேவாவின் மனைவி செய்த பிரச்சனையினால் இவர்களுடைய காதல் உறவு கடந்த 2011ஆம் ஆண்டு முறிந்தது.
சிம்பு-நயன்தாரா: வல்லவன், இது நம்ம ஆளு போன்ற படங்களில் நயன்தாரா, சிம்பு இருவரும் இணைந்து நடித்தனர். இவ்வாறு வல்லவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இருவரும் காதல் வயப்பட்டார்கள். பிறகு சில காரணங்களால் இருவரும் தங்களது உறவை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அனிருத்-அண்ட்ரியா: இசையமைப்பாளரான அனிருத், ஆண்ட்ரியா இருவரும் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அனிருத்திற்கு வயது 19, ஆண்ட்ரியாவிற்கு வயது 24. இது குறித்து வயது வித்தியாசம் காரணமாக காதல் முறிந்ததாக அனிருத் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
சமந்தா-நாக சைதன்யா: தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யா இருவரும் இணைந்து சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காதல் வயப்பட்டுள்ளனர். பிறகு குடும்பத்தினர்கள் சமதத்துடன் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள். நான்கு வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இவ்வாறு இவர்களுடைய பிரிவு ரசிகர்களுக்காக அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.