முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வரும் தமிழ் நடிகைகள்.! 40 வயதிலும் 12 கோடி சம்பளம் வாங்கும் ஒரே நடிகை இவர்தான்.?

sai pallavi
sai pallavi

Sail pallavi – Trisha: சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் எங்கு தங்களது அழகு போய்விடுமோ என்ற பயத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வரும் நடிகைகள் இருக்கின்றனர். அதேபோல் சில நடிகைகள் சரியாக காதல் வாழ்கை அமையாத காரணத்தினால் திருமணம் செய்து கொள்ளலாம் இருக்கிறார்களால். அப்படி தற்பொழுது வரையிலும் திருமணம் செய்துக் கொள்ளாத நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

த்ரிஷா: கோலிவுட்டில் 40 வயதை கடந்தும் தனது மார்க்கெட்டை இழக்காமல் புகழின் உச்சத்தில் இருந்து வருபவர் தான் நடிகை த்ரிஷா. துணை கதாபாத்திரமாக அறிமுகமான இவர் தற்பொழுது முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். த்ரிஷா பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் சில வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இருவரும் தங்களது காதலை முடித்துக் கொண்டனர். ராணா பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்த த்ரிஷாவிற்கு 2018ஆம் ஆண்டு வருண் என்ற தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது ஆனால் இதுவும் திருமணம் வரை செல்லவில்லை. இவ்வாறு காதல் வாழ்க்கை சரியாக அமையாத காரணத்தினால் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் த்ரிஷா.

அனுஷ்கா: தமிழ், தெலுங்கு திரைவுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார் ஆனால் தற்பொழுது வரையிலும் உடல் எடை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனை அடுத்து பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸ்வுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. பிறகு இருவரும் தங்களது காதலை முறித்துக் கொண்டனர் தற்பொழுது அனுஷ்காவிற்கு 41 வயதாகியும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: காக்கா முட்டை படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்த தனது கதாபாத்திரத்திற்க்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது இவருக்கு 33 வயதாகி இருக்கிறது. எந்த ஒரு காதல் கிசுகிசுப்பிலும் சிக்காமல் இருந்து வரும் ஐஸ்வர்யா தற்பொழுது வரையிலும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

சாய் பல்லவி: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிஸியாக இருந்து வரும் சாய் பல்லவி நடனம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கும் நிலையில் அதற்கான பூஜை விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர்களுடன் மாலை அணிந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக சாய் பல்லவி மற்றும் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அருகில் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக வதந்திகளை பரப்பி வந்தனர். எனவே இதனால் கடுப்பான சாய் பல்லவி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார்.