2023 மக்கள் மத்தியில் பிரபலமான 10 நடிகைகள் லிஸ்ட்.. நயன்தாராவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா.?

nayanthara
nayanthara

திரை உலகில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் எப்பொழுதுமே முதலிடத்தை பிடிக்க போட்டி போடுவது வழக்கம் அந்த வகையில் நயன்தாராவின் இடத்தை பறிக்க பல நடிகைகள் தொடர்ந்து போட்டி போடுகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ஆர் மேக்ஸ் நிறுவனம் மக்கள் மத்தியில் பாப்புலரான நடிகர், நடிகைகள் யார் என்பது குறித்து ஒரு கருத்துக்கணிப்பை வெளியிடும் அதன்படி 2023 ஜனவரி மாதம் யார் பாப்புலரான 10 நடிகைகள் யார் என்பது குறித்து ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறது. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

1. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா : சமீபகாலமாக சோலோ மற்றும் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வெற்றியை கண்டு வருகிறார் இப்போது கூட இவர் கைவசம் ஜவான், இறைவன், நயன்தாரா 75 போன்ற படங்கள் இருக்கிறது.

2. சமந்தா : தொடர்ந்து நல்ல கதைகளில் நடித்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறார் மறுபக்கம் ரசிகர்களை கவர்ந்து இழுக்க கிளாமரான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள் தற்பொழுது பிரபலமான நடிகைகளில் இரண்டாவது இடத்தை தனக்கு சொந்தமாக்கி உள்ளார்.

3. திரிஷா : பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தில் நடித்து உள்ளார் மறுபக்கம் லியோ திரைப்படத்திலும் இவர் நடிப்பதால் இவர் தற்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக காணப்படுகிறார்.

4. கீர்த்தி சுரேஷ் : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை கீர்த்தி சுரேஷ் ஆனால் கடந்த சில மாதங்களாக இவர் நடிப்பில் பெரிய அளவிலான படங்கள் வெளிவரவில்லை என்றாலும் தொடர்ந்து கியூட் மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

5. தமன்னா : சிறு இடை வேலைக்கு பிறகு தமிழ் பக்கம் நடிக்கிறார் தற்பொழுது ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் கிளாமரான உடைகளை அணிந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

அடுத்தடுத்த இடத்தில் இருப்பவர்களைப் பற்றி சற்று சுருக்கமாக பார்ப்போம்.. ராஷ்மிகா மந்தனா, ஜோதிகா, அனுஷ்கா செட்டி, பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்கள் தான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த முதல் பத்து இடத்தை பிடித்திருக்கும் நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.