இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 10 படங்கள் மற்றும் தொடர்கள்.. ஜெயிலர் எந்த ஓடிடியில் தெரியுமா?

jailer movie
jailer movie

Latest OTT Release: வாரம் தோறும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் நிலையில் இவ்வாறு திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி திரையரங்குகளில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறதோ அதே போல் ஓடிடி-யிலும் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், பிரைன் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஜி5 உள்ளிட்டபல ஓடிடி  தளங்களில் வெளியாகும் படங்களில் முழு விவரத்தை தற்போது பார்க்கலாம். இவ்வாறு திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் தொடர்களும் வாரம் தோறும் வெளியாகி வருகிறது.

ஜெயிலர்: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியினை பெற்றது. இதனை அடுத்து ஜெயிலர் படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஐ ஆம் க்ரூட்’ சீசன் 2: ஐ ஆம் க்ரூட் படத்தின் இரண்டாவது சீசன் வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

தி லிட்டில் மெர்மெய்ட்: தி லிட்டில் மெர்மெய்ட் படம் வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி அன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.

ஹட்டி: இயக்குனர் அனுராக் காஷ்யப் மற்றும் நவாசுதீன் சத்திக் ஹீரோவாக நடித்திருக்கும் ஹட்டி படம் செப்டம்பர் 6ஆம் தேதி ஜீ5-வில் ஒளிபரப்பாகிறது.

குங் ஃபூ பாண்டா: ஹார்லி க்வின் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சீசன் 3 வெளியாகிறது. இந்த படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

டாப் பாய் சீசன் 3: போதைப் பொருட்கள் விற்பனையாளர்கள் இருக்கும் ஆபத்தான பகுதியில் வாழும் ஒருவர் தனது நேர்மையான வாழ்க்கையை வாழ விரும்புகிறார். எனவே இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து டாப் பாய் சீசன் 3 உருவாகியுள்ளது இந்த படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

விர்ஜின் ரிவர் சீசன் 5: விர்ஜின் ரிவர் தொடர் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அன்று நெட்பிளிக்ஸ் வெளியாகிறது.

செட்டிங் இன் பார் வித் கேக்: உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி அன்று பிரைம் வீடியோ ஓடிடி களத்தில் வெளியாகிறது.

தி பிளாக் டேமூன்: மூர்க்கமான மெகலோடான் சுறா வடிவில் ஆபத்தை தருகிறது எனவே இதிலிருந்து தனது குடும்பத்தை எப்படி நாயகன் காப்பாற்றுகிறார் என்பதே இந்த படத்தின் கதை. இந்த படம் வருகின்ற செப்டம்பர் 8ம் தேதி லயன்ஸ்கேட் ப்ளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தி சேஞ்சலிங்: கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான விக்டர் லாவகளே நாவலை அடிப்படையாக வைத்து உளவியல் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அன்று ஆப்பிள் டிவி+ தளத்தில் வெளியாகிறது.