கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பள்ளி வளாகம், கல்லூரி வணிக வளாகம் மற்றும் மது கடை மூடப்பட்டதால் பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். கடந்த 40 நாட்களாக மூடப்பட்டுடிருந்த மதுக்கடை நாளை திறக்கப்பட உள்ளது.மதுக்கடை திறக்கப்படும் இடத்தில் உரிய பாதுகாப்பு சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்தியா தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது ஆயத்தீர்வு வரியினை தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்திய காரணத்தினால் 180 மில்லி மதுபான பாடலின் அதிகபட்ச சில்லரை விற்பனை ஆக 10ரூபாய் கூடுதலாகவும் 180 மில்லி மதுபான பாட்டில்கள் அதிகபட்ச சில்லறை விற்பனை 20 ரூபாய்க்கும் கூடுதலாக ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது மட்டுமில்லாமல் இது நாளை முதல் உயர்த்தப்படும் என தெரிவிக்கிறது.
இதனால் மது வாங்குபவர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது இன்னும் 40 நாட்கள் கழித்து கடையை திறக்க உள்ளதால் மக்கள் எவ்வளவு விலையாக இருந்தாலும் மக்கள் வாங்க வருவார்கள் என கூறப்படுகிறது.