Liquor bottle frogs in Sirkazhi !! Brewers are shocked: கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 45 நாட்களாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தின் சில நிபந்தனைகளுடன் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்திருக்கும் அரசு மதுபான கடையில் தென்பாதியயை சேர்ந்த ஒருவர் மது பாட்டில் வாங்கி சென்றுள்ளார்.
மது பாட்டிலை திறந்து பாதியை கப்பில் ஊற்றி விட்டு மூடும்போது உள்ளே ஏதோ கிடப்பதை பார்த்து உள்ளார். அப்பொழுது அந்த மது பாட்டிலின் அடியில் தவளை கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார் மேலும் அருகில் இருந்த நண்பரிடம் காமித்து விட்டு இதுகுறித்து மதுபான கடைக்கு விவரம் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து மதுக்கடை ஊழியர்கள் அந்த மது பாட்டிலை பெற்றுக்கொண்டு வேறு ஒரு புது மது பாட்டிலை கொடுத்து தவளை விழுந்த தகவல் யாருக்கும் தெரியாமல் மறைக்கப் பார்த்தனர்.
மேலும் மது பாட்டிலில் தவளை விழுந்ததை குறித்து நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பிகாவதி விடம் கேட்டபோது அவர் இதுவரை தங்கள் கவனத்திற்கு தகவல் வரவில்லை. மேலும் ஒயின் மற்றும் பிர் வகைகளை விற்பனை செய்யும்போது பரிசோதித்த பின்னர் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் ரம் போன்ற மது வகைகள் நிறுவனங்களிலிருந்து வரும் போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டு இருக்கலாம். மேலும் இது போன்ற தவறுகள் இனி வரும் காலங்களில் நடக்காமல் இருக்க அனைத்து வகையான மது பானங்களையும் பரிசோதித்து வழங்க ஊழியர்களை அறிவுறுத்துவோம் என்று தெரிவித்தார்.