தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் சிறுத்தை சிவா இவர் திரைப்படங்கள் இயக்குவது மட்டுமின்றி ஒளிப்பதிவாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார் அந்த வகையில் இவர் தமிழில் முதன் முதலாக இயக்கிய திரைப்படம்தான் சிறுத்தை.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து இருப்பது மட்டுமல்லாமல் கதாநாயகியாக தமன்னா நடித்திருப்பார் இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படமானது மாபெரும் ஹிட்டு கொடுத்தது மட்டும் இல்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கியது.
மேலும் இதனை தொடர்ந்து சிவாவின் பெயர் சிறுத்தை சிவா என அழைக்கப்பட்டது. அதன்பிறகு தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம், விவேகம் என நான்கு திரைப்படங்களை தொடர்ச்சியாக எடுத்திருந்தார் அதுமட்டுமில்லாமல் தற்போது கூட தல அஜித்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இவ்வாறு வெளிவந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி ஆனது மட்டும் இல்லாமல் அது உண்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தற்போது அண்ணாத்த என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இத் திரைப்படம் வெளியாகி ஓரளவு விமர்சனத்தை பெற்று வசூலில் வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.