வெற்றிப்பட இயக்குனர் லிங்குசாமியை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த இருவர்.? அட அதுக்குன்னு அடிமேல் அடியா…

lingu-samy
lingu-samy

தமிழ் சினிமாவில் வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் லிங்குசாமி.  இவர் தமிழில் முதன்முதலாக ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் தனது முதல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி திரைப் படமாக அமைந்ததால் அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதேபோல் லிங்குசாமி குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் திரைப்படங்களாக எடுத்து வந்தார். இந்த நிலையில் இவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம் தான் ரன் இந்த திரைப்படத்தில் மாதவன் மீரா ஜாஸ்மின் ஆகியவர்கள் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். ரன் திரைப்படம் இயக்குனர் லிங்குசாமியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றது.

மேலும் ரன் திரைப்படத்தை தொடர்ந்து சண்டைக்கோழி, பீமா, வேட்டை பையா ஆகியவற்றில் திரைப்படங்களை இயக்கினார்.  சூர்யா நடிப்பில் வெளியாகிய அஞ்சான் திரைப்படத்தை இயக்கினார் ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை அதனால் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்திற்கு பிறகு அட்ரஸ் இல்லாமல் போனார்கள் லிங்குசாமி அதன் பிறகு மீண்டும் சண்டைக்கோழி 2 திரைப்படத்தை இயக்கினார்.

ஆனால் இந்த திரைப்படமும் அவர் நினைத்தபடி வெற்றியை தொடவில்லை. இந்த இரண்டு திரைப்படங்களின் தோல்வி அவரை அதல பாதாளத்துக்கு தள்ளியது. இந்த நிலையில் இயக்குனராக அனைத்து முயற்சிகளையும் கைவிட்டுவிட்டு தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். ஆரம்ப காலத்தில் லிங்குசாமி தயாரித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் நடிகர் கமலஹாசனை வைத்து உத்தமவில்லன் என்ற திரைப்படத்தை தயாரித்து மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார்.

பொருளாதார நஷ்டத்தை சந்தித்த லிங்குசாமி எப்படி இதிலிருந்து மீள போகிறார் என பலரும் கேலியும் கிண்டலும் செய்ய ஆரம்பித்தார்கள்.  சூர்யாவின் அஞ்சான் கமலஹாசனின் உத்தம வில்லன் ஆகிய இரண்டு திரைப்படங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்தார் லிங்குசாமி ஆனால் சூரியா மற்றும் கமலஹாசன் லிங்குசாமியை கண்டுகொள்ளவே இல்லை.

இப்படியே விட்டால் அவ்வளவுதான் என எண்ணிக்கொண்டு லிங்குசாமி அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய ரஜினிமுருகன் என்ற திரைப்படத்தை தயாரித்து ஓரளவு தனக்கு இருந்த கடன் சுமையைக் குறைத்தார் பின்பு மீண்டும் படங்களை தயாரிப்பதில் இறங்கினார். இந்த நிலையில் சமீபத்தில் கூட லிங்குசாமி தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்கினார் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் மீண்டும் தமிழில் ஒரு திரைப்படத்தை லிங்குசாமி இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.