ஜெக் மோசடி வழக்கில் சிக்கிய லிங்குசாமி.! சட்டரீதியாக ஆறு மாத சிறை… எதற்காக தெரியுமா.?

Lingusamy
Lingusamy

இயக்குனர் லிங்குசாமிக்கு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஒட்டு மொத்த சினிமாவையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக மற்றும் சமந்தா நடிப்பில் உருவான எண்ணி ஏழு நாள் என்ற திரைப்படத்தை தயாரிக்க இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரரான சுபாஷ் ஆகிய இருவரும் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் மற்றும் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் 1 கோடி 5 லட்சம் கடன் வாங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்த நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திரும்பி செலுத்தாததால் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரரான சுபாஷ் மீது பிவிபி நிதி நிறுவனம் இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது.  இவர்கள் இருவரும் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதாக லிங்குசாமி தரப்பிலிருந்து  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர்கள் வாங்கிய கடன் தொகையை திரும்பி செலுத்தாததாலும் லிங்குசாமி கொடுக்கப்பட்ட காசோலையில் பணம் இல்லாததாலும் செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. இதனால் பிவிபி நிறுவனம் அவர்கள் லிங்கு சாமி மீது செக் மோசடி வழக்கு  தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

அதன் பிறகு வழக்கை விசாரித்த நீதிபதி லிங்குசாமி மீதும் அவரது சகோதரர் சுபாஷ் மீதும் ஆறு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். தற்போது செக் மோசடி வழக்கில் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது லிங்குசாமி அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியது என்னவென்றால் நேற்று முதல் தன்னை சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பியவர்களுக்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை ஆகும் என அவர் கூறியுள்ளார். மேலும் லிங்குசாமி பிவிபி கேபிட்டல்ஸ் மற்றும் திருப்பதி பிரதர்ஸ் ஃபிலிம் வீடியோ தயாரிப்பு நிறுவனம் இடையே ஆனது மேலும் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார்.