தனுஷ் பள்ளியில் படிக்கும் பொழுது அப்படி.? உண்மையை புட்டு புட்டு வைத்த பாபா பாஸ்கர்..

dhanush
dhanush

சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் மிக பிரபலமான ஒருவர் டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர். இவர் கடந்த சில வருடங்களாக சின்ன திரையில் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் போட்டியாளராகவும் கலந்து கொண்டு அசத்தி வருகிறார் அந்த வகையில் விஜய் டிவியில் அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு ஜட்ஜ் ஆக இருந்து வருகிறார். அந்த நிகழ்ச்சி தொடர்ந்து சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த வாரம் இதில் பள்ளி சீருடையில் டான்ஸ் ஆடும் வாரம் என்பதால் பலரும் பள்ளி சீருடையில் நடனம் ஆடினர்.

அப்பொழுது ஜட்ஜ் ஆக இருந்த பாபா பாஸ்கர் மற்றும் சங்கீதா போன்றவர்கள் தனது பள்ளிக்காலத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் அதில் முதலில் பேசிய சங்கீதா நான் ஒரே பள்ளியில் 12 வது வரையும் படித்தேன் அந்த பள்ளி ரொம்ப கண்டிஷன் ஆனா ஸ்கூல் நான் படிப்பு விஷயத்தில் எப்பொழுதுமே டாப் என கூறினார் இவரை தொடர்ந்து பேசிய பாபா பாஸ்கர்.

எனக்கு படிப்பு சுத்தமாக வராது ஸ்போர்ட்ஸ் டே ஆனுவல் டே போன்றவை வரும்பொழுது சந்தோஷமாக இருப்பேன்.. மேலும் விளையாட்டில் நான் ரொம்ப சுட்டி கோகோ கிரிக்கெட் என தொடங்கி அனைத்திலும் சூப்பராக விளையாடுவேன் நான்தான் கேப்டன் என கூறினார். எக்ஸாமில் நான் பாஸ் பண்ண முக்கிய காரணமே தனுஷ் தான்.

அவர் நன்றாக படிப்பார் அவரைப் பார்த்து எழுதி நானும் பாஸாகி விடுவேன் எக்ஸாம் நாட்கள் வந்து விட்டால் அவருக்கு போண்டா பஜ்ஜி என வாங்கி கொடுத்து அவரை கரெக்ட் பண்ணி விடுவேன் பள்ளியில் மட்டுமல்ல இப்பொழுதும் ஒரு நல்ல நண்பராக என்னை வாழ வைத்து வருகிறார் என பாபா பாஸ்கர் கூறியிருக்கிறார்.