சினிமாவில் இருக்கும் நடிகைகள் தங்களுடைய அழகை இன்னும் அதிகப்படுத்துவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது வழக்கம். இந்த வழக்கம் பாலிவுட் நடிகைகளிடம் தான் அதிகம் தோன்றியது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி முதல் சுருதிஹாசன் வரை பலரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உள்ளார்கள்.
பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை எனக் கூறினாலும் ஒரு சில நடிகைகள் ஓப்பனாக ஒப்புக்கொள்கிறார்கள். சொல்லப்போனால் தமிழில் முன்னணி நடிகையாக வளம் வரும் நயன்தாரா, சமந்தா என பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்கள் எனவும் ஒரு கிசுகிசு இருந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் அவர்கள் செய்து கொண்டார்களா இல்லையா என்பது அவர்கள் வாய் திறந்தால் மட்டுமே தெரிய வரும். அப்படி இந்த பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சையில் சிக்கியவர்தான் இளம் நடிகை அதுல்யா ரவி. சமூக வலைதளத்தை பயன்படுத்தி பலரும் பிரபலமாகி வருகிறார்கள் அந்த வகையில் நடிகை அதுல்யா ரவி அவர்களையும் கூறலாம் கோயம்புத்தூரில் பிறந்த இவர் 2017 ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் தன்னுடைய கண்களால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டவர்.
இவர் ஒரு பார்வை பார்த்தாலே ஒட்டுமொத்த ரசிகர்களும் சொக்கி விடுவார்கள் அந்த அளவு வசீகர பார்வையாக இருக்கும் இவருக்கென சமூகவலைதளத்தில் ஆர்மி இருக்கிறார்கள் இளசுகள் மத்தியில் பிரபலமான அதுல்யா ரவி அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்றார். இவர் நடிப்பில் வெளியாகிய ஏமாளி திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது இந்த திரைப்படத்தில் முதன் முறையாக கவர்ச்சி களத்தில் குதித்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்ற அதுல்யா ரவி அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். அதுல்ய ரவி குடும்ப பாங்காக வெளியிடும் புகைப்படத்திற்கு தான் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது ஆனால் திடீரென கவர்ச்சியாக நடித்ததால் ரசிகர்கள் இதுபோல் நடிக்காதீர்கள் என கோரிக்கை வைத்தார்கள்.
இதனைப் புரிந்து கொண்ட அதுலய ரவி இனி இதுபோல் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என கூறி மன்னிப்பும் கேட்டார் அதன் பிறகுதான் நாடோடிகள் 2 சுட்டு பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்தம் என பல திரைப்படங்களில் நடித்தார். இந்தநிலையில் அதுல்யா ரவி முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் இரட்டை அர்த்தம் உள்ள வசனங்களை பேசி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.
இந்த திரைப்படத்தில் பாக்கியராஜ் மகன் சாந்தனு ஹீரோவாக நடித்திருந்தார் இவர்களுடன் இணைந்து பாக்கியராஜ், மனோபாலா, ஆனந்தராஜ், மயில்சாமி, யோகி பாபு என பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் சுமாரான விமர்சனங்கள் தான் கிடைத்தது இந்த நிலையில் அதுல்ய ரவி சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்த ரசிகர்கள் நீங்களும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டீர்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள் ஏனென்றால் பலரும் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார்கள் அதேபோல் நீங்களும் செய்து விட்டீர்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.