லோகேஷ் போல் விஜய் வைத்து நானும் ஒரு சம்பவம் பண்ணுவேன்.! உண்மையை உடைத்த விஷால்.

vishal
vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இதனை தொடர்ந்து வாரிசு திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வாரிசு திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருக்கிறார் விஜய்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர்கள் கூட்டணியில் இரண்டாவது முறையாக தளபதி 67 திரைப்படத்தின் மூலம் மறுபடியும் இணைய இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் கிட்டத்தட்ட நான்கு ஐந்து வில்லன்களை லோகேஷ் நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மும்பை கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ள தளபதி 67 திரைப்படத்தில் மெயின் வில்லன்களாக மிஸ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், பிரித்திவிராஜ், உள்ளிட்ட பல பிரபலங்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து நடிகர் விஷாலையும் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். அதற்காக லோகேஷ் கனகராஜ்  விஷாலின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரிடம் பேசி இருக்கிறார் ஆனால் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக அவரால் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இதனால் கொஞ்சம் கஷ்டத்தில் இருக்கிறாராம் விஷால். அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய் போல ஒரு நடிகர் உடன் இணைந்து நடிப்பதில் மிகவும் சந்தோசமான விஷயம் தான் ஆனால் அவருடன் நடிக்க முடியாமல் போனது கொஞ்சம் மன வருத்தமாக தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் வைத்து நான் ஒரு படத்தையாவது இயக்காமல் விடமாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகர் விஷால் அது மட்டுமல்லாமல் விஜையுடன் ஒரு சம்பவம் இருக்கும் எனவும் கூறியுள்ளார். இதனால் தற்போது விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிப்பதில்லை என்பது உறுதியாகிவிட்டது.