rioraj biggboss: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தெரியாத பல முகங்களையும் திரைக்கு அறிமுகப்படுத்தி பிரபலமடைய செய்கிறார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் பல நடிகர், நடிகைகள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.
சில நடிகர், நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒரு சில நடிகர், நடிகைகள் தாங்கள் செய்யும் சிறிய தவறுகளால் மக்கள் மத்தியில் இருந்த நல்ல பெயரையும் கெடுத்துக் கொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் எப்படியாவது பிரபலமடைந்து விடவேண்டும் என்றும் படவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் நினைத்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
ஆனால் பலர் இருக்கும் நல்ல பெயரையும் கெடுத்துக் கொள்வோமோ என்ற பயத்தால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலும் இருக்கிறார்கள். இதற்கு ஒரு உதாரணம் நம் வீர தமிழச்சி ஜூலி என்று கூறலாம் நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இந்நிலையில் லாக் டவுன் காரணமாக பிக் பாஸ் சீசன் 4 தொடங்குவதற்கு தாமதமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது எந்தெந்த நடிகர், நடிகைகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றி லிஸ்ட் தற்போது இணையதளங்களில் கசிந்து வருகிறது.
அந்தவகையில் கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் பிரபலமடைந்த ரியோ ராஜ் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பிளான் பண்ணி பன்னனும் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ரசிகர்கள் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் இற்கு அடுத்ததாக நம்ம ரியோ ராஜ் என்று கூறி வருகிறார்கள். இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.