Like Aishwarya Rajesh, her brother-in-law is also an actress : சினிமா உலகில் தற்போது அதிக படங்களை கைப்பற்றி சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சமீபத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படங்களான வடசென்னை மற்றும் நம்ம வீட்டு பிள்ளை இவருக்கு சிறப்பான ஒரு நற்பெயரை பெற்றுத் தந்தது.
இப்படி சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் தமிழ் சினிமாவில் வெகுவரைவிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றிய தற்போது முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு மாறி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
பெரும்பாலான நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்தது விட்டால் பெரிய நடிகை என்று நினைத்துக்கொண்டு சினிமாவுலகில் மாஸ் காட்டி வருவார்கள் ஆனால் இவரோ சத்தமே இல்லாமல் அமைதியாக பட வாய்ப்பை கைப்பற்றி மற்ற முன்னணி நடிகர்களை எரிச்சலடைய செய்துள்ளார்.
அவரது குடும்பத்தில் இவர்தான் நடிகை என்று பார்த்தால் பலர் மீடியா உலகில் பயணித்து வருகின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார் அவர் அழகு சீரியலில் நடித்து வருகிறார் மேலும் ஐஸ்வர்ய ராஜேஷின் அண்ணியும் ஒரு நடிகை தான்.
இவர் பிரபுதேவா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளிவந்த லட்சுமி படத்தில் சிறுவர்களுக்கு நடனம் சொல்லித் தரும் நடிகையாக வலம் வந்தவர் சோபியா இவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி என்பது குறிப்பிடத்தக்கது.