கோலியை தூக்கிட்டு இந்த வீரரை கேப்டன்னாக போடுங்க.. புலம்பும் கிரிக்கெட் ரசிகர்கள்.! வைரல் நியூஸ் இதோ.

இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்துடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தியது போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அங்கு மழை குறுக்கிட்டு சில நாட்களை வீணடித்து அதன் பிறகு போட்டி தொடங்கியது முதலில் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய பரிந்துரைத்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஒருகட்டத்தில் விக்கெட்டை பறிகொடுத்தது அதை நிலைநிறுத்த முடியாமல் பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் எடுத்து சுருண்டது அதன்பின் விளையாண்ட நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் முடியாமல் இந்திய அணி முட்டுக்கட்டை போட்டது.

இப்படி இரண்டு அணியும் சமபலத்துடன் மோதினாலும் இரண்டாவது இன்னிங்ஸ் நியூசிலாந்து அணி சரியான முறையில் பந்து இந்த வீசி இந்திய அணி வீரர்களை தடுமாறச் செய்தது. வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறியதோடு மட்டுமில்லாமல் குறைந்த ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனாது.

இதன்பிறகு சிறப்பாக விளையாட நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் கோப்பையை தன் வசப்படுத்தியது இதனால் இந்திய ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் கோலியின் கேப்டன்ஷிப் சரியில்லை என விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்திய ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் கோலியின் கேப்டன்ஷிப் சுத்தமாக சரியில்லை ஆட்டத்தை ட்ரா செய்திருக்கலாம் அல்லது போட்டியை இழுத்து இருக்கலாம் அதை கூட செய்யாமல் மிக சொதப்பலாக விளையாட்டு விட்டது என கோலியை தாறுமாறாக கிழித்தனர்.

rohit
rohit

அதுமட்டுமல்லாமல் எந்த ஊரு தொடரையும் சமீபகாலமாக அவர் வெற்றி பெற்றுத் தரவில்லை எனவும் கூறுகின்றனர் இதனையடுத்து கோலியை தூக்கி விட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறினார் ஏற்கனவே ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் டெஸ்ட் தொடரையும் அவருக்கு கொடுத்த நிரந்தரமாக மாற்றவேண்டும் என பலரும் கூறுகின்றனர். இந்த விஷயம் தற்பொழுது இணையதளத்தில் மிகப்பெரிய ஒரு அலையாக வீசுகிறது.