வாழ்க்கையே போச்சு என்ற சோகத்தில் செல்வராகவன்..! ஊக்கம் அளிக்கும் வகையில் ட்வீட் செய்த சேரன்..!

cheran
cheran

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றித் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் செல்வராகவன் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் திரைப்படத்தை இயக்குவதற்கு மாறாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் அவர்கள் சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மேலும் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது வருகின்ற 2022ஆம் ஆண்டு அல்லது பிப்ரவரி மாதம் அமேசான் தளத்தில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நமது இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தன்னுடைய தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தை தயாரிப்பது மட்டுமில்லாமல் கதாநாயகியாக இந்துஜா நடிப்பது மட்டுமின்றி இசை அமைப்பாளராக இமான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் “வாழ்க்கை முடிந்தது இனிமேல் ஒன்றும் இல்லை என்று நினைக்க போதெல்லாம் கடவுள் ஒரு கதவை திறக்கிறார்” வேதனை இன்றி விடியல் இல்லை என சோகமாக ஒரு டுவிட் வெளியிட்டிருந்தார்.

இந்த ட்வீட்டை பார்த்த இயக்குனர் சேரன் சிலநேரம் வேதனையை அனுபவிக்கும் மனிதனாக இருப்போம், அதேபோல சில சமயம் கதவுகளை திறக்கும் கடவுளாய் இருப்போம். அது மட்டுமில்லாமல் உங்கள் படங்களால் வாழ்க்கை உயர்வு அடைந்தவர்களுக்கு நீங்கள் கடவுளைப் போல  தான் என ஆறுதல் கூறி உள்ளார்.

அந்த வகையில் சேரன் பதிவை பார்த்த செல்வராகவன் உங்கள் அன்பான வார்த்தைக்கு நன்றி உங்களுடைய ஆட்டோகிராப் திரைப்படம் தான் எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக  இன்று வரை இருக்கிறது என பல்வேறு ரசிகர்களும் கூறி வருகிறார்கள் என பதிவு செய்திருந்தார்.