சினிமா காலத்திற்கு ஏற்றவாறு நகர்வதால் தற்போது நடிகர் நடிகைகளையும் தாண்டி இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாவில் பின்புறம் இருக்கும் காஸ்ட்யூம் டிசைனர், நடன இயக்குனர் பாடலாசிரியர் இசையமைப்பாளர் மற்றும் பல டெக்னீசியன் போன்றவர்களின் பெயர்களும் பேசப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் டான்ஸ் மாஸ்டர்கள் தற்போது ஒவ்வொருவராக வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் கலா மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகியோரை தொடர்ந்து மக்களின் மனதையும் நடிகர்களின் மனதையும் சம்பாதித்தவர் சாந்தி நடன மாஸ்டர்.
90 காலகட்டங்களில் பின்னணி டான்ஸராக இருந்து பல்வேறு படங்களிலும் சில படங்களில் நடன இயக்குனராகவும் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா பற்றிய தனது அனுபவங்களை அவர் கூறியுள்ளார்.
இதுவரை அவர் மின்னலே, ஜெமினி, ஆயுத எழுத்து போன்ற பல படங்களில் நடனம் ஆடிய பிறகுதான் நான் யார் என்று பெயர் கிடைத்தது. இதுவரை நான் பல இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக இருந்துள்ளேன். அந்தவகையில் பிருந்தா மற்றும் கல்யாண் மாஸ்டர்கள் எனக்கு பெரிதும் உதவினர்.
அவர்களுடன் பல படங்களில் சேர்ந்து வேலை செய்தேன் இருப்பினும் ஒரு சில கால கட்டத்தில் ஒரு சில காலங்கள் சீரியலில் நடிக்க போய் விட்டேன் ஏழு வருடங்கள் பிரேக் எடுத்த பின் என்னை எல்லோரும் மறந்து விட்டார்கள் ஒரு கட்டத்தில் இயக்குனர் மணிரத்தினம் தான் என்னை நடன இயக்குனராக படத்தில் அறிமுகப்படுத்தினார்.
இதுவரை நான்காயிரம் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறேன் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன். மேலும் பல நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன். சினிமாவில் நம்பர் ஒன் நடிகர் விஜய் தான்.
அவர் நடனம் ஆடும் பொழுது அவரை சைட் அடிப்பேன்.24 மணி நேரமும் பாத்துகிட்டே இருக்கலாம் போல தோன்றும். நடிகர் சிம்புவுடன் நடனம் ஆட டான்ஸ் மாஸ்டர்களே பயப்படுவாங்க அவ்வளவு எனர்ஜிடிக்கான ஆளு நடிகர் சிம்பு. மேலும் சினிமாவில் மல்டி டேலண்ட் பார்சனாக இருப்பதாக சிம்புவை புகழ்ந்து தள்ளினார்.