Actor Rajkiran: நடிகனாக சினிமாவில் பிரபலமான ராஜ்கிரண் ஒரு கட்டத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் படங்கள் இயக்கவும் தயாரிப்பாதையும் செய்து வந்தார். அப்படி இவருடைய தயாரிப்பில் வெளியாகி கல்லாப்பெட்டியை நிரப்பிய டாப் 5 படங்கள் குறித்து பார்க்கலாம்.
ராசாவே உன்னை நம்பி: ராமராஜன் நடிப்பில் வெளியான ராசாவே உன்னை நம்பி படத்தினை ராஜ்கிரண் தயாரித்திருந்தார். இத்திரைப்படம் 100 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடி சூப்பர் ஹிட் ஆனது. 1988ல் வெளியான இப்படத்தில் ராமராஜன் உடன் இணைந்து ரேகா, பூர்ணம் விஸ்வநாதன், சரிதா ஆகியோர்கள் நடித்திருந்தனர்.
2023 இல் மீண்டும் தலை தூக்கி ஆட்டம் போட்ட 3 நடிகர்கள்.!
எல்லாமே என் ராசாதான்: 1995ஆம் ஆண்டு வெளியான எல்லாமே என் ராசாதான் படத்தினை ராஜ்கிரண் இயக்கி அவரே தயாரித்திருந்தார். இப்படம் தமிழில் மரண ஹிட்டானதை பார்த்து தெலுங்கிலும் ரீமேக் செய்தனர். தமிழில் மோகன் பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மோனிகா இணைந்து நடித்திருந்தனர்.
அரண்மனைக்கிளி: 1993ஆம் ஆண்டு வெளியான அரண்மனைக்கிளி திரைப்படத்தினை இயக்கிய தயாரித்திருந்தார் ராஜ்கிரண். இத்திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததால் கன்னடத்தில் ரீமேக் செய்தனர்.
என்னெப் பெத்த ராசா: ராமராஜன் நடிப்பில் வெளியான என்னெப் பெத்த ராசா படத்தினை ராஜ்கிரண் தயாரித்திருந்தார். இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. 1989ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை சிராஜ் இயக்க ராமராஜன் ரூபினி ஆகியோர்கள் நடித்திருந்தனர்.
அடேங்கப்பா இதுக்கெல்லாம் ஒரு கொண்டாட்டமா சிங்க பெண்ணே சீரியல் குழு நடத்திய அலப்பறை.!
என் ராசாவின் மனதிலே: 1991ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியான என் ராசாவின் மனதிலே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இத்திரைப்படத்தினை ராஜ்கிரண் தயாரித்தது மட்டும் அல்லாமல் நடிக்கவும் செய்தார். மேலும் வடிவேலு, மீனா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். தமிழில் வெளியான இப்படத்தினை தெலுங்கிலும் ரீமேக் செய்தனர்.