கொரானவிற்கு பிறகு குண்டுன்னு என கலாய்த்தவர்களுக்கு.! ஒர்க்கவுட் வீடியோ மூலம் பதிலடி கொடுத்த தமன்னா.!

tamannah
tamannah

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டிப் பறந்தவர் நடிகை தமன்னா. இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், அஜித் போன்ற இன்னும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி உட்பட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சிறப்பாக நடித்து வந்தாலும் இவரின் அழகுக் கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

தற்பொழுது தமன்னா ஹிந்தியில் போலே சுடியன், தட் இஸ் மகாலட்சுமி மற்றும் தெலுங்கில் சீட்டிமார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் லாக் டவுனால் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தோம் தற்போதுதான் லாக் டவுன் முடிந்து இயல்பு நிலைக்கு மாறி வருகிறோம். அந்தவகையில் தமன்னாவின் அம்மா அப்பாவிற்கு கொரோனா தோற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து தமன்னாவிற்கு கொரோனா தொற்று உறுதியான இந்நிலையில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த தமன்னாவின் உடல் எடை கூடிவிட்டது.

எனவே தமன்னா தனது கடுமையான உடற்பயிற்சியின் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு நான் மீண்டும் என் பழைய நிலைக்கு மாறி விட்டேன். என் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகும் போது நீங்கள் குண்டு என்று கூறியது எனக்கு தெரியும் என்று கூறி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ.