உன் படம் வெளிவரட்டும் ப்ளூ சட்டை போட்டுக்கொண்டு என்ன பண்றேன்னு பாரு..! ப்ளூ சட்டை மாறனிடம் நேருக்கு நேராக வாக்குவாதத்தில் பிரபல இயக்குனர்..!

blue-sattai-maran-1
blue-sattai-maran-1

தமிழ் சினிமாவில் புது புது வகையான கதையம்சமுள்ள திரைப்படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் வெளிவரும் திரைப்படத்தை கிண்டல் செய்ய ஒரு மிகப் பெரிய கூட்டமே உள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதில் முன்னிலை வகிப்பது யாரென்றால் ப்ளூ சட்டை மாறன்.

இவ்வாறு இவர் கொடுக்கும் விமர்சனத்தை பொறுத்து திரைப்படத்தின் வசூலில் மாற்றம் ஏற்படுவதாக பல்வேறு தயாரிப்பாளர்களும் இவர் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர் எந்த ஒரு நல்ல திரைப்படம் வந்தாலும் சரி இவருடைய விமர்சனம் ஓய்ந்ததே கிடையாது.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் அவர்கள் மூன் பிக்சர் தயாரிப்பில் ஆன்ட்டி இந்தியன் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ளார் இத்திரைப்படம் தற்போது படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது இதில் ப்ளூ சட்டை மாறன் மற்றும் தயாரிப்பாளர் இதர படக்குழுவினர்கள் போன்றோர் அனைவருமே கலந்து கொண்டுள்ளார்கள்.

மேலும் நான் திரைப்படம் இயக்குவதற்கு எந்த பதிவும் செய்யவில்லை அந்த வகையில் நான் திரைப்படம் இயக்கப் போகிறேன் என்று என்னுடைய நண்பர்களிடம் கூறினேன் அதற்கு என்னுடைய நண்பர்கள் உனக்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை என என்னை கிண்டல் செய்தார்கள்.

இதன் காரணமாக நான் திரைப்படம் இயக்குவதில் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன் பிறகு பல்வேறு நபர்களுடன் ஆலோசனை கேட்டதில் அனைவரும் என்னை கேலி மட்டும் தான் செய்தார்கள் இதன் காரணமாகவே நான் திரைப்படம் எடுக்க முயன்றேன். இந்நிலையில் இந்த படம் எதிர்பார்த்ததைவிட மிகவும் நன்றாக வந்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் நான் திரைப்படம் இயக்கி முடிந்ததன் பிறகு பாரதிராஜாவை சந்தித்தேன் அப்பொழுது பாரதிராஜா அவர்கள் உங்கள் படம் முடிந்துவிட்டது என்று நான் கேள்விப்பட்டேன். மேலும் உன் படத்தை போடு நான் ப்ளூ சட்டை போட்டு கொண்டு வந்து என்ன செய்யறேன் பாரு என்று பாரதிராஜா கூறியுள்ளார்.

bharathiraja-1
bharathiraja-1

இதனைத் தொடர்ந்து ஒரு வருடத்தில் திரை உலகில் 100 திரைப்படங்களுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது அதில் அனைத்து திரைப்படமும் வெற்றி கண்டதா என்றால் இல்லை ஒரு பத்து திரைப்படம் மட்டுமே நன்றாக இருக்கும்.

அந்த வகையில் தற்போது ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வெளிவராமல் இருந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் ஆன்ட்டி இந்தியன் திரைப்படம் உங்கள் அனைவரையும் கவரும்  என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.