இன்று புத்தாண்டு என்பதால் உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள் அதை போல் பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் புத்தாண்டு நிகழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீட்டில் இரட்டை கொண்டாட்டமாக இருக்கிறது.இன்று புத்தாண்டு மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளும் அதனால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு 41வது பிறந்தால் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் ரஜினி வீட்டில் ரசிகர்கள் அண்ணனுடன் இணைந்த ஒரு புகைப்படத்தை வெளியிடுங்கள் அன்னி எனக் கோரிக்கை வைத்து வருகிறார்கள் அதேபோல் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் தனுஷ் ரசிகர்கள் இன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் என்பதால் அவரை வாழ்த்தி ட்வீட் போட்டு இருந்தால் நல்லா இருந்திருக்கும் என தனுஷை கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள். ஒரே ஒரு வார்த்தை ஹாப்பி பர்த்டே என்று சொல்லி இருக்கலாமே என ஆதங்கப்பட்டு வருகிறார்கள். 17 வருடம் கூடவே இருந்தவர் ஆச்சே பாசம் இல்லாமல் இருக்குமா எனவும் தனுஷை பார்த்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடத்த ஜனவரி மாதம் தங்கள் பிரிய போவதாக வெளியிட்டார்கள் இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் இந்த நிலையில் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்காவது இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என ரஜினி முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் ஆசைப்பட்டு வருகிறார்கள்.
2023 ஆம் ஆண்டு தொடங்கி விட்டதால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதற்கு காரணம் அவர் திரைப்படத்தின் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் இந்த ஆண்டுதான் அவர் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருக்கப் போகிறார் பல ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த் விஷ்ணு விஷால் ரஜினிகாந்த் என பலரும் நடிக்க இருக்கிறார்கள். தங்களுடைய மகனுக்காக பல வருடம் படத்தை இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது அவர்கள் வளர்ந்து விட்டதால் தற்பொழுது படத்தை இயக்க ரெடி ஆகிவிட்டார் தனுஷை வைத்து தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் லால் சலாம் திரைப்படத்தில் விக்ராந்தை வைத்து இயக்கி வருவதால் இவருக்கு முக்கிய திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.