தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் நிஜ உலகில் நல்ல நண்பர்களாக இருந்தாலும் திரை உலகில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் போட்டி போடுகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்களில் டாப் நடிகரின் படங்கள் ரிலீசாகுவது வழக்கம் அப்படி எதிர்பாராத விதமாக அஜித், விஜய் படங்கள் வெளியாகின்றன இதை ரசிகர்கள் போட்டியென கருதிக் கொள்கின்றனர்.
ஆனால் விஜய், அஜித் அப்படி நினைத்தது கிடையாது பல மேடைகளில் அஜித், விஜய் பற்றியும் விஜய், அஜித் பற்றியும் புகழ்ந்து பேசிய பல வீடியோக்கள் வெளியாகி உள்ளது. அதை நாம் பார்த்து இருக்கிறோம் இப்படி நல்ல நண்பர்களாக இருக்கும் இவர்கள் இருவரும் அடிக்கடி துபாயில் ரகசியமாக சந்தித்துக் கொள்வதாக கூட தகவல்கள் வெளி வருகின்றன.
இந்த நிலையில் தான் அஜித்தின் அப்பா சுப்பிரமணியம் அவர்கள் பக்கவாத நோய் காரணமாக மருத்துவமனையிலேயே உயிரிழந்தார் விஷயத்தை கேள்வி பட்ட திரை உலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் அஜித்தின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் வர முடியாதவர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர்.
அஜித்தின் அப்பா சுப்பிரமணியம் இறந்தது தளபதி விஜய்க்கு தெரிய படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு உடனடியாக அஜித் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு பின் அஜித்தை சந்தித்து சிறிது நேரம் பேசி உள்ளார். ஆனால் அதன் புகைப்படம், வீடியோக்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு கண்ணியமாக விஜய் நடந்து கொண்டார் அவர் அஜித் வீட்டுக்கு செல்வதற்கு முன்பாகவே விஜய் அப்படி ஒரு கண்டிஷன் போட்டு உள்ளாராம்.
அந்த தகவல் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது இது அஜித்தின் குடும்ப விஷயம் நான் அங்கு செல்வது எந்த காரணத்திற்காகவும் பப்ளிசிட்டியாக மாறிவிடக்கூடாது. நான் அஜித் வீட்டிற்கு செல்வது முன்கூட்டியே யாருக்கும் தெரிய கூடாது என தன் டீமிற்கு காரராக கூறிவிட்டாராம் நண்பர் அஜித் வீட்டிற்கு நான் செல்வது தெரிந்தால் ரசிகர்கள் அங்கு கூடி விடுவார்கள்.
இது அஜித் குடும்பத்திற்கு சங்கடம் ஆகிவிடும். அதனால் நான் சத்தமில்லாமல் சென்று வந்தார். அஜித்தின் வீட்டு முன்பு செய்தியாளர்கள் பத்திரிக்கைகள் புகைப்படக் கலைஞர்கள் கூடியிருந்தார்கள். விஜய் காரை பார்த்ததும் விஜய் உடன் புகைப்படம் எடுக்க கேட்டுள்ளனர் ஆனால் விஜய் இப்பொழுது அது அவசியமில்லை எனக் கூறி தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் என சொல்லி அங்கிருந்து சென்று விட்டாராம்.