Leo : லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்ட பொருட்ச அளவில் உருவான திரைப்படம் “லியோ”. பல தடைகளை தாண்டி படம் அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆனது. மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்த்தனர்.
படத்தில் ரத்தம் தெறிக்கும் படியான காட்சிகள், எமோஷனல் என அனைத்தும் அழகாக இருந்தாலும் கதை ஏற்கனவே பார்த்த கதை போலவே இருப்பதால் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் வசூலில் மட்டும் இதுவரை எந்த ஒரு குறையும் வைக்கவில்லை முதல் நாளில் 148 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்தது இரண்டாவது நாள் முடிவில் 210 கோடிக்கு மேல் வசூல் செய்தன.
மூன்றாவது நாள் முடிவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்கள் விடுமுறை நாள் என்பதால் லியோ வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் செம்ம சந்தோஷத்தில் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார் அப்படி பேட்டி ஒன்றில் லியோ படம் குறித்தும் இயக்குனர் லோகேஷ், விஜய் குறித்து பேசி வந்தார்.
அப்பொழுது தொகுப்பாளர் நீங்கள் லோகேஷுக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறீர்கள். விக்ரம் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து கமல் கார் ஒன்றை பரிசாக கொடுத்தார். லியோ படத்திற்கு லோகேஷுக்கு ஹெலிகாப்டர் தரப் போகிறீர்களா என கேள்வி எழுப்பினார் இதற்கு பதில் அளித்த லலித் குமார்.
ரஜினியை தொடர்ந்து லியோ படம் பார்த்த கமல் ஹாசன்..
லியோ படத்தின் போது எனக்கு என்ன சார் கொடுப்பீங்கன்னு லோகேஷ் கேட்டது உண்மை தான்.. நான் பதிலுக்கு என்ன வேணும் லோகேஷ் என்று கேட்டேன். லோகேஷ் ஹெலிகாப்டர் வாங்கிய கொடுங்க என சொன்னார். வாங்கி தந்துட்டா போச்சி.. இந்த தகவல் இணையதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.
"#Lokesh, Helicopter ketrukkaru..🚁😅" – #LEO Producer #Lalit@Dir_Lokesh @7screenstudio #ThalapathyVijay #LokeshKanagaraj #LeoReview #LCU #LokeshCinematicUniverse #LeoDas #Badass #Trisha #Anirudh #LeoMovie #Thalapathy #Vijay #LeoBlockbuster #LeoIndustryHit #Galatta pic.twitter.com/U47FBfzre0
— Galatta Media (@galattadotcom) October 21, 2023