தளபதி விஜய் முதலில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தார் போக போக ஆக்சன் படங்களில் தலை காட்டத் தொடங்கினார் முதலில் பகவதி படத்தில் நடித்து அந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதை தொடர்ந்து சிவகாசி, கில்லி, திருப்பாச்சி..
திருமலை போன்ற அடுத்த அடுத்த ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் வசூல் மன்னன் என்ற பெயரையும் பெற்றார். இப்பொழுது கூட லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது.
ஹாலிவுட் ரேஞ்சிக்கு ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாகவும் பட குழுவினர் கூறி வருகின்றனர். படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், திரிஷா,, சஞ்சய் தத் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் படத்தின் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரசாந்த் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
இறுதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் லியோ திரைப்படம் குறித்து ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. படத்தின் ஷுட்டிங் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க மறு பக்கம் பிசினஸும் ஜோராக நடைபெற்று வருகிறதாம் வெளிநாட்டு உரிமம் மட்டுமே சுமார் 30 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டில் மட்டுமே இத்தனை கோடி என்பதால் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் லியோ படத்தின் விற்பனை ஜோராக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் புதிய ரெக்கார்டை உருவாக்கும் என கூறி வருகின்றனர் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.