leo vijay trisha kiss scene bayivan ranganathan open talk : சினிமாவில் முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் முன்னணி நடிகைகள் இளம் நடிகைகள் என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சித்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவர் அடிக்கடி நடிகைகளை பற்றி பேசி தான் இவரின் மார்க்கெட்டை உயர்த்தி கொள்கிறார். அதிலும் இவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை பாடி டிமாண்ட் இந்த ஒரு வசனத்தை வைத்து பல வருடமாக ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
லியோ படம் முதல் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை வரை பல சம்பவங்கள் பற்றி வெளிப்படையாகவும் பேசி வருகிறார். அந்த வகையில் த்ரிஷா விஜய் லிப்லா காட்சி பற்றியும் தற்பொழுது பேசியுள்ளார். தளபதி விஜய் நண்பன் திரைப்படத்திற்கு பிறகு ஒரு முத்தக் காட்சியில் நடித்திருந்தார் அதன் பிறகு 11 வருடங்கள் கழித்து தான் லியோ திரைப்படத்தில் த்ரிஷாவுடன் முத்தக் காட்சியில் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் அதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது விஜய்க்கு முத்த காட்சியை தவிர்த்து இருக்கலாம் என ஒரு எண்ணமும் இருக்கிறது. ஆனால் திரிஷாவிற்கு அன்பின் வெளிப்பாடுதான் முத்தம் அதனால் லிப் லாக் காட்சிக்கு தடை போடவில்லை இதற்கு முன்பு த்ரிஷா சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் கவர்ச்சியான முத்தக் காட்சிகள் நடித்திருந்தார்.
ஏற்கனவே சங்கீதா த்ரிஷாவுடன் நடிக்க கூடாது என விஜய்க்கு கண்டிஷன் போட்டதாகவும் அதனால்தான் இத்தனை வருடம் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கவில்லை எனவும் ஒரு தகவல் தீயாய் பரவி வந்தது ஆனால் தற்பொழுது இந்த முத்த காட்சிகள் தெரிய வந்ததால் சங்கீதா மிகவும் வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் முத்த காட்சிக்கு லோகேஷ் விஜயிடம் கேட்டுள்ளார் அதற்கு விஜய் த்ரிஷாவுக்கு ஓகே என்றால் எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது என கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார் ஆனால் இன்னும் விஜய் குடும்பத்தில் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லை என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள நிலையில் தலைக்கு உயர்ந்த மகன் மகள் இருக்கும் பொழுது விஜய் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முத்தக் காட்சியில் நடித்துள்ளது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.