24 மணி நேரத்திற்குள் ஜெயிலர் படத்தின் சாதனையை முறியடித்த லியோ ட்ரெய்லர்…

leo
leo

Jailer vs Leo: சமீப காலங்களாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக ரசிகர்களும் இதனை கொண்டாடிவரும் நிலையில் தற்பொழுது ஜெயிலர் படத்தின் சாதனையை லியோ திரைப்படம் முறியடித்திருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

ரஜினிகாந்த் 70 வயதை தாண்டியும் தொடர்ந்து சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார். அப்படி இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது மேலும் தொடர்ந்து இவருடைய படங்கள் பல சாதனைகளை படைத்து வருகிறது.

அப்படி ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது இப்படம் கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக 600 கோடிக்கு மேல் கல்லா கட்டியது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க பல சாதனைகளையும் படைத்த நிலையில் தற்பொழுது ஜெயிலர் படைத்த சாதனையை விஜய்யின் லியோ முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாத காரணத்தினால் நேற்று திரையரங்குகளில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

ரோகிணி தியேட்டரில் லியோ படத்தில் ட்ரைலரை பார்த்து உற்சாகமடைந்த ரசிகர்கள் ரோகிணி தியேட்டரில் இருந்த மொத்த இருக்கைகளையும் அடித்து நொறுக்கி நாசம் செய்தனர். இதனால் ரோகிணி நிர்வாகத்திற்கு பல லட்சம் நஷ்டமாகி உள்ளது. இவ்வாறு தற்பொழுது லியோ படம் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ஜெயிலர் படத்தின் சாதனையை லியோ ட்ரைலர் முறியடித்துள்ளது.