Leo : நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் சஞ்சய் தத் மிஷ்கின் பிரியா ஆனந்த் கௌதம் வாசுதேவ் மேனன் அர்ஜுன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் வருகின்ற 5 ஆம் தேதி ட்ரெய்லரை பட குழு வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள் அதனால் இந்த திரைப்படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் ஆடியோ வெளியீட்டு விழா கிடையாது எனக் கூறியதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள் இந்த நிலையில் டிரைலர் வெளியீடு அதிகார பூர்வமாக அறிவித்ததால் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் தனஞ்செழியன் லியோ படம் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது லியோ திரைப்படத்திற்கு கண்டிப்பாக U/A சர்டிபிகேட் தான் கிடைக்கும் என கூறினார். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் 900 முதல் 950 ஸ்கிரீன் வரை லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளார். தமிழகத்தில் மொத்தம் 1150 ஸ்கிரீன் இருக்கும் நிலையில் 950 ஸ்கிரீன் வரை லியோ திரைப்படம் வெளியானால் வசூல் நல்ல வசூல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் கிராமத்தில் இந்த திரைப்படம் ஓடுமா என யோசிக்கும் அளவிற்கு அடிமட்ட லெவலுக்கு இறங்கி அனைத்து திரையரங்குகளிலும் லியோ திரைப்படத்தை ஒளிபரப்புகிறார்கள். இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட திரையரங்கை கூட லியோ திரைப்படம் விட்டு வைப்பதில்லை அப்படி அனைத்து திரையரங்குகளிலும் லியோ திரைப்படம் ஒளிபரப்பப்படும் என தயாரிப்பாளர் தனஞ்செழியன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது இங்கு திரைப்படம் ஓடுமா என எதிர்பார்க்கும் வகையில் அடிமட்ட லெவலில் உள்ள திரையரங்கிலும் லியோ திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ரிலீசுக்கு முன்பே 100 கோடி பிசினஸ் செய்ய பட குழு முன்புறமாக செயல்பட்டு வருகிறது.