சஞ்சய் தத்தை வரவேற்ற லியோ டீம்.. படும் வைரலாகும் விஜயின் லுக்.. இதோ அதிகாரப்பூர்வமான வீடியோ

vijay-sanjay thath
vijay-sanjay thath

தமிழ் சினிமாவில் தோல்வியை கொடுக்காத இயக்குனர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கிறார்கள் அந்த லிஸ்டில் இணைந்துள்ளவர் தான் இயக்குனர் லோகேஷ். முதலில் மாநகரம் என்னும் படத்தை இயக்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் அதன் பிறகு இவர் எடுத்த கைதி, மாஸ்டர், விக்ரம் என அனைத்துமே வசூல் ரீதியாக வெற்றி அடைந்து பிளாக்பஸ்டர் வரிசையில் சேர்ந்தது.

அடுத்து ஒரு வெற்றி படத்தை கொடுக்க விஜய் உடன் மற்றொரு முறை இணைந்து லியோ திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி வருகிறது படத்தில் விஜய் உடன் கைகோர்த்து மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், திரிஷா, பிரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி, அர்ஜுன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர்.

முதல் கட்டப்பட பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து தனி விமானத்தின் மூலம் 180 பேர் கொண்ட குழு காஷ்மீர் பறந்தது. அங்கு கடும் குளிரென்று கூட பார்க்காமல் படபிடிப்பு நடைபெற்று வருகிறது நடிகர் நடிகைகளும் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர் இதுவரை மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர்களின் காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டது.

இப்படி படத்தில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற மறுபக்கம் படத்தில் இணைந்தும் வருகின்றனர் அந்த வகையில் பாலிவுட் ஹீரோ சஞ்சய் தத் சமீப காலமாக தென்னிந்திய படங்களில் நடிக்கிறார் அந்த வகையில் கடைசியாக இவர் நடித்த கேஜிஎப் 2 மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது தொடர்ந்து பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்துள்ளன

அந்த வகையில் இப்பொழுது லியோ திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போ வீடியோ ஒன்றை வெளியிட்டு அதை உறுதிப்படுத்தி உள்ளது படக்குழு இதோ நீங்களே பாருங்கள்.