leo success meet kutti story : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த அக்டோபர்19 தேதி உலகம் முழுவதும் வெளியாகியது படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நல்ல வசூல் வேட்டை நடத்தியது கிட்டத்தட்ட 540 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது இதனால் லியோ பட குழு சக்சஸ் மீட் வைத்து கொண்டாடினார்கள்.
லியோ சக்சஸ் மீட்டில் விஜய் குட்டி ஸ்டோரீஸ் சொல்லுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அதேபோல் சக்சஸ் மீட்டில் விஜய் குட்டி ஸ்டோரி சொன்னார். இந்த லியோ சக்சஸ் மீட்டில் விஜய் குடும்பத்தில் விஜயின் அம்மா மட்டும்தான் கலந்து கொண்டார் மனைவி மகன் என யாரும் கலந்து கொள்ளவில்லை.
உங்களுக்கு கீழ் தான்” இந்த தளபதி” கட்டளை இடுங்கள் – லியோ வெற்றி விழாவில் விஜய் பேச்சு.!
அதேபோல் இதற்கு முன்பு அனிருத் இசையமைத்த ஜெயிலர் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்களின் விழாவிற்கு முதல் ஆளாக கலந்து கொண்ட அனிருத் லியோ திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்து கொள்ளவில்லை அவர் வெளிநாட்டில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்தது.
மேலும் இந்த சக்சஸ் மீட்டில் படத்தில் நடித்த அர்ஜுன், திரிஷா ,சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், லோகேஷ் கனகராஜ், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டார்கள். விஜய் குட்டி ஸ்டோரி சொல்வதற்கு ஆரம்பித்தவுடன் காக்கா கழுகு மான் எனக் கூறியவுடன் விஜய் சிரிக்க ஆரம்பித்தார் இதனால் அரங்கமே சிரித்தது.
பிறகு சிறிது நேரம் கழித்து குட்டி ஸ்டோரி சொன்னார் அப்பொழுது காட்டில் இரண்டு வேடர்கள் இருந்தார்கள் அவர்கள் வேட்டையாட சென்றார்கள் ஒருவர் வில்லை வைத்து முயலை வேட்டையாடினார் மற்றொருவர் ஈட்டியை வைத்து யானையை வேட்டையாட முயற்சி செய்து தோற்று விட்டார்.
இந்த இருவரில் யார் வெற்றியாளர் என கேள்வி எழுப்பினர் அதற்கு விஜய் யானையை வேட்டையாடி முயற்சி செய்து தோற்றவர் தான் வெற்றியாளர் எனக் கூறினார். இந்த ஸ்டோரியில் இருந்து விஜய் சொல்ல வருவது என்னவென்றால் கமலஹாசன் அரசியலில் கால் தடம் பதித்து தோற்றார் ஆனாலும் அவர் தான் வெற்றியாளர் சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலை வேண்டாம் என சினிமாவில் ஜெயித்து வந்தாலும் வெற்றியாளர் இல்லை என ரசிகர்கள் அந்த குட்டி ஸ்டோரியுடன் இதை ஒப்பிட்டு சண்டையே ஆரம்பித்து விட்டார்கள்.
அதேபோல் தொடர்ந்து பேசிய விஜய் 2026 இல் கப்பு முக்கியம் பிகில் எனக் கூறியுள்ளார் தளபதி 68 திரைப்படத்திற்கு பிறகு விஜய் அரசியலில் முழு ஈடுபாட்டுடன் இறங்கப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.