leo success meet kutti story : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வெற்றி விழாவில் விஜயின் மனைவி சங்கீதா மற்றும் மகன் ஜேசன் சஞ்சய் வருவார்கள் எனவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் விஜயின் அம்மாவை தவிர குடும்பத்தில் இருந்து யாரும் வரவில்லை.
அனிருத் இதற்கு முன்பு இசையமைத்த ஜவான், ஜெயிலர் ஆகிய படத்தின் விழாவில் முதல் ஆளாக பங்கேற்றார் ஆனால் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் அனிருத் கலந்து கொள்ளவில்லை வெளிநாட்டில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது அதேபோல் லியோ திரைப்படத்தில் நடித்த திரிஷா, அர்ஜுன், லோகேஷ், கனகராஜ், மிஸ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், என பலரும் கலந்து கொண்டார்கள்.
அப்பொழுது ஒரு காட்டில் சிங்கம், புலி, யானை, மான், காக்கா, கழுகு என சொன்னவுடன் விஜய் சிரிக்க மொத்த நேரு ஸ்டேடியம் சிரிக்க ஆரம்பித்து விட்டது பிறகு கொஞ்சம் கேப் விட்டு மீண்டும் குட்டி ஸ்டோரிக்கு புகுந்த விஜய் காட்ட்டில் வேட்டைக்கு இரண்டு பேர் போனாங்க ஒருத்தர் வில்லம்போட போய் முயலை வேட்டையாடிட்டு வந்தார் இன்னொருத்தர் ஈட்டியோட போய் யானைக்கு குறி வைத்து ஒண்ணுமே இல்லாமல் வந்தார் இதில் யார் வெற்றியாளர் எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு தளபதி விஜய்யும் கண்டிப்பா யானைக்கு குறி வைத்தவர் தான் வெற்றியாளர் பெருசா கனவு காணுங்கள் என குட்டி ஸ்டோரி மூலம் மறைமுகமாக சரியான மேட்டரை விஜய் பேசி உள்ளார். கமலஹாசன் அரசியலில் முயற்சி செய்து தோற்றுவிட்டாலும் அவர்தான் வெற்றியாளர் அரசியல் பக்கம் ஒதுங்காமல் சினிமாவில் ரஜினி ஜெயித்துக் கொண்டிருந்தாலும் அவர் வெற்றி பெறவில்லை என்ற வகையில் தான் விஜய் குட்டி ஸ்டோரி சொன்னார் என ஒரு பக்கம் ரசிகர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.
அதுமட்டுமில்லாமல் 2026ல் கப்பு முக்கியம் பிகிலு என்று விஜய் சொல்லி உள்ள நிலையில் கண்டிப்பாக தளபதி 68 திரைப்படத்திற்கு பிறகு அரசியலில் நுழைவார் விஜய் என எதிர்பார்க்கப்படுகிறது.